அதிகாலை தினம் தேடியே-Adhikaalai Dhinam Thedi

Deal Score0
Deal Score0

அதிகாலை தினம் தேடியே – உம்
முகத்தினில் விழித்திடுவேன்
புதுகிருபை அதை தேடியே – உம்
பாதத்தில் அமர்ந்திடுவேன்
ஆனந்தம் பேரின்பம் – என்
அன்பின் பாதத்திலே
ராஜா அல்லேலூயா – என்
தேவா அல்லேலூயா

1. கரங்களை விரித்து கர்த்தரை பார்த்து
காலையில் பணிந்திடுவேன்
கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து
மகிமையை செலுத்திடுவேன்
பாதத்திலே முகம் பதித்து
முத்தங்கள் செய்திடுவேன்
ராஜா அல்லேலூயா – என்
தேவா அல்லேலூயா

2. கதிரவன் வரும் முன் கர்த்தரை தேட
கண்களும் விழித்திடுதே
உம்மனம் குளிர என் மனம் பாட
ஆயத்தமாகிடுதே
உம் வசனம் தியானித்திட
உள்ளம் காத்திடுதே
ராஜா அல்லேலூயா – என்
தேவா அல்லேலூயா

3. கண்ணிமை நேரம் உமை மறவாமல்
கருத்தாய் நினைத்திடவே
கனிவாய் இரங்கி கருணை ஈந்து
கரத்தால் அணைத்திடுமே
நாள் முழுதும் வல்லமையால்
நிதமும் நனைத்திடுமே
ராஜா அல்லேலூயா – என்
தேவா அல்லேலூயா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications