அன்பான தந்தையே அருள் பொழிவாய் – Anbana Thanthaiya Arul
Shop Now: Bible, songs & etc
அன்பான தந்தையே அருள் பொழிவாய் – Anbana Thanthaiya Arul
அன்பான தந்தையே அருள்பொழிவாய்
இந்நாளில் எங்களை ஆசீர்வதிப்பாய் – 2
1. கைகளை உயர்த்தி ஜெபிக்கின்றோம்
எங்களை நிறைவாய் ஆசீர்வதியும் – 2
முழந்தால் பணிந்து வேண்டுகின்றோம்
எங்களை நிறைவாய் ஆசீர்வதியும் – 2
2. எம்முடைய செவிகளை திறந்து விடும்
உம்முடைய வார்த்தைகள் கேட்டிடுவோம் – 2
எம்முடைய இதழ்களை மலரச்செய்யும்
உம்முடைய புகழ்தனை எடுத்துரைப்போம் – 2
3. எம்முடைய பெற்றோர் ஆசிரியர்
நண்பர்கள் சகோதரர் யாவரையும் – 2
நான் இன்று படிக்கும் பாடங்களையும்
உம்மிடமே தந்தே ஆசீர்வதியும் – 2
அன்பான தந்தையே அருள்பொழிவாய்
இந்நாளில் எங்களை ஆசீர்வதிப்பாய்
ஆமென்
More Songs
Tags: tamil catholic songs