அருளே அழகே ஆனந்த அன்னையே – Arulae Azhagae Aanantha
Shop Now: Bible, songs & etc
அருளே அழகே ஆனந்த அன்னையே – Arulae Azhagae Aanantha
அருளே அழகே ஆனந்த அன்னையே
நீ எந்தன் தாயம்மா
இருளே நிறைந்த குறைகள் மலிந்த
நான் உந்தன் சேய்யம்மா-(2)
நிலவில்லா வானமும் நீரில்லா பூமியும்
எல்லாம் வீண் தானே
அழகில்லா கலைகளும் அருளில்லா நிலைகளும்
எல்லாம் வீண் தானே
அருளிலே நிறைந்த என் அன்னையே உன்னிலே நான் பெற்றேன் எல்லாமே – (2)
சுடர் இல்லா நாட்களும் சுவையில்லாத பாக்களும் எல்லாம் வீண் தானே
பொருள் இல்லா வார்த்தையும் புகழ் இல்லா வாழ்க்கையும் எல்லாம் வீண் தானே அன்னையே கன்னியே உன் திருக் கருணையில் ஒளிர்ந்திடும் என் வாழ்வே
More Songs
Tags: tamil catholic songs