இதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது- Idho Sagotharar Orumithu Vaasam seivathu

Deal Score+1
Deal Score+1

Lyrics of the song
1. இதோ சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது,
எத்தனை நன்மையும் இன்பமானது -2
அது எர்மோன் மேலும் சீயோன் மேலும்,
இறங்கும் நல்ல பனியைப் போன்றது-2
அங்கு கர்த்தர் நித்திய ஆசீர்வாத வாழ்வைத் தருகிறார்
அங்கு கர்த்தர் நித்திய ஆசீர்வாதம் கட்டளை இடுகிறார்.

2. அது ஆரோனின் தலை மேல் ஊற்றப்பட்டதும்,
அவன் உடை முழுவதும் இறங்கும்
நல்ல தைலம்போன்றது.-2
அது எர்மோன் மேலும் சீயோன் மேலும்,
இறங்கும் நல்ல பனியைப் போன்றது-2
அங்கு கர்த்தர் நித்திய ஆசீர்வாத வாழ்வைத் தருகிறார்
அங்கு கர்த்தர் நித்திய ஆசீர்வாதம் கட்டளை இடுகிறார்.

3. தன்னை போல் பிறரிடத்தில் அன்பு கூறுவோம்,
ஆவியின் ஒரு மனதை காத்து கொள்ளுவோம்-2
பிதா குமாரன் ஆவியானவர், திரியேக தேவன் நமக்குள்ளே2
நம்மில் ஒற்றுமையை கர்த்தர் கட்டளை இடுகிறார்
ஆவியின் பின் மாரியை வாக்கு தருகிறார்-2
– இதோ சகோதரர்

26என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

27உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.

28சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்து போகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.

29பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.

30மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.

சங்கீதம் 119 :25-30

Follow us : Instagram.com/christianmedias

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password