இறைவா உன் திருமுன் – Iraiva Un Thirumun
Shop Now: Bible, songs & etc
இறைவா உன் திருமுன் – Iraiva Un Thirumun
இறைவா உன் திருமுன்
ஒரு குழந்தை போல்
தாவி மேவி வருகின்றேன்
என் நிலை நான் சொல்கின்றேன்
உன் குழந்தை நான் அல்லவா
என்னை நோக்கி ஓடி வந்து
என்னை காப்பாயோ
அன்பை தேடும் போது என்
தந்தை நீ அல்லவா
அமுதம் நாடும் போது என்
அன்னை நீ அல்லவா
ஒரு குறையும் இன்றி காத்தாய்
நல் அன்பை ஊட்டி வளர்த்தாய்
உன்னை ஒதுக்கியே நானும் வாழ்ந்து இனி என்ன
கைமாறு செய்வேன் -2
மங்கும் வாழ்வை அகற்றி
ஒளி தருபவர் நீர் தானையா
மனதில் அமைதி பொங்க
வழி அருள்பவர் நீர்தானாயா
உன்னை என்றும் எண்ணி வாழ்ந்து ஒரு நாளும்
பிரியாமல் வளர்ந்து உந்தன்
மடியிலே தவழ்ந்து நானும்
இனி அப்பா தந்தாய் என்று அழைப்பேன்-2