இறைவா நீ பொழிந்தாய் மழைத்துளி – Eraivaa Nee Pozhinthai Mazhai Thuli
Shop Now: Bible, songs & etc
இறைவா நீ பொழிந்தாய் மழைத்துளி – Eraivaa Nee Pozhinthai Mazhai Thuli
இறைவா நீ பொழிந்தாய் மழைத்துளி போல் எந்தன் மனதினில் நீ இறங்கி நிறைந்தீர் ஐயா உறவாலும் உடலாலும் இணைந்தீர் ஐயா உள்ளங்கையில் என்னை பொறுத்தீர் ஐயா அன்பாகி அருளாகி ஒளியாகும் தேவா உம் அளவில்லா அன்புக்கு குறைவேதயா
என்னுளில் நீ இறங்கி வருவீர் ஐயா என் நெஞ்சை கழுவி தருவீர் ஐயா என் இதயம் மகிழ செய்வீர் ஐயா என்னோடு வாழ்ந்து கொள்வீரையா பொன்னான உன் அன்பில் நனைத்தீர் ஐயா கண்ணான கண்ணாக காத்தீர் ஐயா
எனக்காக சிலுவை சுமந்தீர் ஐயா திரு ரத்தம் சிந்தி இறந்தீர் ஐயா என் பாவக் கறைகள் தீர்த்தீரையா எனக்காக தியாகம் செய்தீர் ஐயா பொன்னான உன் அன்பில் நனைத்தீர் ஐயா கண்ணான கண்ணாக காத்தீர் ஐயா