உன்னை மறவாமல் வாழ – Unnai Maravamal Vaazha Yennai
உன்னை மறவாமல் வாழ – Unnai Maravamal Vaazha Yennai
உன்னை மறவாமல் வாழ என்னை நினைவாக மாற்றும் உன்னை பிரியாமல் வாழ என்னை உறவாக்கி காட்டும் உந்தன் நினைவாலே தான் நானும் வாழ வேண்டும் உந்தன் கோட்டைக்குள்ளே தான் குடியும் கொள்ள வேண்டும்
உந்தன் உறவு மலர்ந்திட முழு மனதாய் என்னை அணைத்துக் கொண்டாய் அன்பு நாதரே நெஞ்சம் இணைந்து
கோர்த்திட கரம் பதித்தாய் நீயே கருணை தந்த கனிவின் வள்ளலே கண்ணீர் துளியோ எங்கோ மறைய நெஞ்சம் முழுதும் உன்னில் உறைய
புது உறவாய் மலர்ந்தாய் என் புது மணவாள திருவருளாய் நிறைந்தாய் தினம் அருள் வரம் தாராய் உன்னை வாழ்வில் ஏற்றி தினம் போற்றிடுவேனே நெஞ்சில் ராகம் மீட்டி இசை கோர்த்திடுவேனே
மின்னல் வந்து போகவே ஒளி கொடுக்கும் இருளிலே என் இதயம் தனில் ஒளி கொடுப்பாயே ஜன்னல் ஓரம் வீசிடும் தென்றல் காற்றை போலவே நீயும் வந்து வீச வேண்டுமே உந்தன் அருளோ எங்கும் பெருக உலகம் முழுதும் அன்பாய் உருக ஒருமுறைதான் வாழ்க்கை என் உடன் வருவாயா திருவடியாய் கலந்து எனை தினம் தொடுவாயா உண்மை வாழ்வின் முடிவே உனை அடைந்திடும் வேளை வெண்மையாக்கும் வாழ்வை உனை தொடர்ந்திடுவேனே