எனக்காக வாழும் உயிரே உறவுடன் – Enakaka Vazhum Ueirey Uravudan
எனக்காக வாழும் உயிரே உறவுடன் – Enakaka Vazhum Ueirey Uravudan
எனக்காக வாழும் உயிரே உறவுடன் கலந்திடுவாய் உன்னை பிரிந்து வாடும் போது என் சிறகுகள் முறிகிறதே உன்னோடு சேர்ந்து வாழும் போது என் இதயம் முழுதும் துடிக்கிறது அன்னை மரியே அன்பின் தாயே அகிலம் முழுதும் அருளும் தாயே உயிரில் கலந்து வா நீ என் அன்னையாகவா
வானம் புடைசூழ மேகம் உருமாற சுடராய் ஒளிரும் பேரொளியே நாளும் பார்த்தே நானும் வியந்தேன் மனிதனாய் மாறிவிட்டேன் சிறகோடு உறவென்று தீண்டிட தீண்டிட வாழ்க்கையில் நிஜம் அறிந்தேன்
விழியோரம் கறையை அகற்றிட வேண்டினேன் விழிகள் மயங்கி நின்றேன் உந்தன் அன்பில் நனைந்திருந்தேன் நெஞ்சம் நெகிழ்ந்திருந்தேன் அன்னை மரியே தாய் நீயே அன்பின் வடிவம் நீ தானே தாலாட்டிடும் தாய் நீயே எந்தன் இதய வாசல் தங்கும் தாயே நீ எனது சொந்தம்
விழியில் ஒரு துள்ளி விழிநீர் வடிந்தாலும் அள்ளி அணைக்கும் அருளமுதே பாரம் தீர்த்தே பாதை திறந்தாய் பரிமள சுகம் அளித்தாய் உயிர் வாழும் வரம் தந்து தொடர்ந்திட தொடர்ந்திட கருணை உன் கொடை அறிந்தேன் விரலோடு வீணையை இசைத்திடும் உறவினால் என்னையும் இயங்க வைத்தாய் இதயம் எங்கும் பொழிந்திருந்தாய் அழகாய் ஒளி சுடராய் அன்பாய் பூக்கும் வெண்பூவே அமுதாய் தினமும் நிறைவாயே வழிகாட்டிடும் தாய் நீயே எந்த இருளின் பயமும் விலகும் தாயே நீ எனது ஒளியும்