என் உள்ளமே நீ ஏது சொல்லுவாய் – En Ullame Ne Yethu solluvai
Shop Now: Bible, songs & etc
என் உள்ளமே நீ ஏது சொல்லுவாய் – En Ullame Ne Yethu solluvai
என் உள்ளமே நீ ஏது சொல்லுவாய்
நம் ஆண்டவர் நம்மில் வரும்போது
1. பாவி என்னுள்ளம் உன்னில்லமாக்குவாய்
பாவத்தினால் வந்த சாபம் போக்குவாய்
தாவி வருவாய் என் தாகம் நீக்குவாய்
காவலாய் என்னில் என்றும் நீ வாழுவாய்
வாழ்வரசே வந்தென்னை ஆளுவாய்
2. வானிலிருந்து என் ஆன்ம அமுதமாய்
வாழ்வும் என் வாழ்வினிலே ஒளியுமாய்
கானிலே அன்று என் இன்ப மன்னாவாய்
தானமாய் எல்லாம் எமக்கே தந்தவா
எல்லை உண்டோ உந்தனின் அன்பிற்கே
3. எண்ணங்கள் யாவும் நீயாக வேண்டுமே
எண்ணில்லா நன்மை எனக்குச் செய்ததால்
விண்ணில் வாழும் என் இராஜ இராஜனே
பண்ணாக உன் நாமம் போற்றிப் பாடுவேன்
நன்றி சொல்வேன் என் நேச இயேசுவே
More Songs
Tags: tamil catholic songs