கர்த்தரை கெம்பீரமாய்ப் பாடி – Kartharai Kembeeramaai Paadi

கர்த்தரை கெம்பீரமாய்ப் பாடி – Kartharai Kembeeramaai Paadi

1.கர்த்தரை கெம்பீரமாய்ப் பாடி நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.

2.துதித்தலுடனே அவர் சன்னிதிக்கு முன்பாக வந்து: சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.

3.கர்த்தரே மகா தேவனும்: எல்லாத் தேவர்களுக்கும் மகா
ராஜனுமாயிருக்கிறார்.

4.பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது: பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.

5.சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்:
வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.

6.நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக: நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.

7.அவர் நம்முடைய தேவன்: நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.

8.இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதுத் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள்
இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.

9.அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து: என்னைப் பரீட்சை
பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.

10.நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து: அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,

11.என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று
என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.

12.பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக

13.ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

Kartharai Kembeeramaai Paadi song lyrics in English

1.Kartharai Kembeeramaai Paadi Nammudaya Ratchaniya kanmalaiyai
Sangeerthanam Panna Kadavom Vaarungal.

2.Thuthithaludabae Avar Sannithikku Munbaga Vanthu Sangeerthangalaal Avarai
Aarparithu Paadakadavom

3.Kartharae Mahaa Devanum Ella Devarkalukkum Maha
Rajanumayirukkiraar

4.Boomiyin Aalangal Avar Kaiyil Urukirathu. Parvathangalin Uyarnagalum
Avarudaiyabaigal

5.Samuthiram Avarudayathu Avarae Athai Undakkinaar
Vettantharaiyum Avarudaya Karam Uruvakkittru.

6.Nammai Undakkina Kartharukku Munbaga Naam Paninthu Kuninthu
Mulankaarpadiyida Kadavom Vaarungal

7.Avar Nammudaya Devan Naam Avar Meichalin Jangalum Avar
Kaikullana Aadukalumamae

8.Intru Avarudaya Saththathai Keatpeerkalaagil Vanaantharaththil Kobam
Moottina Pothu Sothanai Naalilum Nadanthathu Pola Ungal
Irudhayaththai Kadinapaduthatheayungal

9.Ange Ungal Pithakkal Ennai Sothithu Ennai Paritchai
Paarthu En kiriyaiyum kandaargal

10.Naarpathu Varushamaai Naan Antha Santhathiyai Aaroshithu Avargal
Valuvi Pokira Irudhayamulla Janamentrum Ennudaya Vazhikalai
Ariyathavarkalentrum Solli

11.Ennudaiya Ilaipaaruthalil Avargal Piraveasippathillai Entru
Ennudaya Kobaththilae Aanaiyittean

12.Pithavukkum Kumaranukkum Parisuththa Aavikkum Magimai Undavathaga

13.Aathiyilum Ippoluthum Eppoluthumaana Sathaa kaalangalium Magimai
Undavathaga Amen.

Psalms-95/சங்கீதம்-95

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo