கோடாகோடி ஸ்தோத்திரம் -Koda Kodi Sthothiram

Deal Score+1
Deal Score+1

பல்லவி

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

சரணங்கள்

1. பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலுயா அல்லேலுயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம் – கோடாகோடி

2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலுயா அல்லேலுயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே – கோடாகோடி

3. குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலுயா அல்லேலுயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம் – கோடாகோடி

4. கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலுயா அல்லேலுயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர் – கோடாகோடி

5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலுயா அல்லேலுயா
தேவ குமாரன் வந்திடும் நாள்
துய முகம் கண்டு கெம்பீரிப்போம் – கோடாகோடி

4 உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.

5 உமது பிமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.

6 நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.

[சங்கீதம் 119:6]

Follow us : http://Instagram.com/christianmedias

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar#Apple Watch Series 6 #Apple Watch Series 5  #Apple iPhone 12 Pro  #Redmi Note 9 Pro
App Icon Apple Music
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password