கைவிடாத கடவுளே ஐயமின்றி – Kaividatha Kadavule Aiyamintri
கைவிடாத கடவுளே ஐயமின்றி – Kaividatha Kadavule Aiyamintri
கைவிடாத கடவுளே ஐயமின்றி நம்பினேன்
கையறுந்த நிலையிலே உம்மை கூவி அழைக்கின்றேன் – 2
புகலிடம் நீயே என் அடைக்கலம் நீயே
உன் பாது காப்பின் நிழலில் நானும் தங்கி மகிழ்ந்து
வாழ்வேன் நாளும் -கைவிடாத
1.வேடரின் கண்ணியும் கொன்றழிக்கும் நோய்களும் என்னை என்ன செய்திடும் -2
இரவு நேர திகில்களும் பகலில் பாயும் அம்பும்
அச்சம் தந்திட இயலுமோ- 2
உண்மை கேடயமாய்
வாய்மை கவசமுமாய் – 2
உன்னதர் உந்தன் உறைவிடம்
நாடிவந்தேன் தெய்வமே
சிறகுகள் அரணாக இறகுகள் புகலாக
அரவணைத்து காத்திடும்
அன்பு தெய்வமே – 2
2.தீமை ஏதும் நேராமல் வாதை என்னை நெருங்காமல்
தூதர் சூழ சொல்கிறீர் – 2
கல்லின் மேல் கால் மோதாமல்
செல்லும் இடமெல்லாம் காக்கின்றேர்
கைகளாலே தாங்குவீர் – 2
தேவையின் வேளையில் தேடிவந்தேன் தெய்வமே- 2
வேண்டலுக்கு பதில்தாரும்
துன்ப நேரத்தில் துணையாகும்
நீடிய ஆயுளும் அமைதி நிறைந்த
வாழ்வையும்
மீட்பாய் எனக்கு அருளுமே
அன்பு தெய்வமே -2