சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ-saarayathai naadi kudipavane

Deal Score0
Deal Score0

1 . சாராயத்தை நாடி குடிப்பவனே ஐயோ !
தான் மட்டும் வாழ வேண்டி சேர்ப்பவனே ஐயோ !
நன்மையை தீமையென்று சொல்பவனே ஐயோ !
கப்பர் நகூமே !
பெத்சாயிதாவே !
கோரோசீனே !
ஐயோ ! ஐயையோ ! உனக்கு ஐயையோ !

2 . லஞ்சம் வாங்கி அநியாயம் செய்பவனே ஐயோ !
தனக்குத் தானே ஞானியென்று சொல்பவனே ஐயோ !
மந்தையை மேய்க்காத மேய்ப்பனுக்கு ஐயோ !
பொய் சொல்லும் மதிகட்ட தீர்க்கனுக்கு ஜயோ !

3 . அநியாய தீர்ப்புச் சொல்லும் அற்பனுக்கு ஐயோ !
அநீதியாய் வீட்டைக்கட்டும் திருடனுக்கு ஐயோ !
ஆண்டவரை மறந்து விட்டு அலைபவனே ஐயோ !
அவரோடு வழக்காடும் மண்ணோட்டுக்கு ஜயோ !

4 . ஏழையை ஒடுக்குகின்ற எத்தனுக்கு ஐயோ !
பார்வோனை நம்புகின்ற பாதகர்க்கு ஐயோ !
கல்லையும் மண்னையும் வணங்கும் கண்மூடிக்கு ஐயோ !
சிறியோர் இடற காரணமாய் இருப்பவனே ஐயோ !

5 . குருடனுக்கு வழி காட்டும் குருடனுக்கு ஐயோ !
நீண்ட ஜெபம் செய்யும் நிர்விசாரிகளே , ஐயோ !
பரலோகத்தை பூட்டுகின்ற போதகரே , ஐயோ !
சுவிசேஷத்தை சொல்லாவிட்டால் உனக்கும் எனக்கும் ஐயோ !

Bible verse:

சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!
ஏசாயா 5:11


கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.
லூக்கா 10:13

9 அநியாயக்காரர் தேவனுயைட ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள். வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும் சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
1 கொரிந்தியர் 6:9

10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
1 கொரிந்தியர் 6:10

16 ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18-16

13 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள், நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.

மத்தேயு 23-13

1 பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

லூக்கா 17-1

11 துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும், அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.

ஏசாயா 3-11

23 பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!

ஏசாயா 5-23

7 இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!

மத்தேயு 18-7

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

Leave a reply

WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications