தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum

Srinisha
Deal Score+1
Deal Score+1

தூய ஆவியே வாரும்
வெண்மை புறாவே வாரும்
அன்பின் அனலாய் வந்து
எம்மில் அபிஷேகம் தாரும்-2

1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்
எம்மை தூக்கிவிடும்
தனிமையிலே சோர்ந்திருக்கும்
மனதை திடப்படுத்தும்

எம்மை சூழும் கிருமிகளை
நெருப்பாய் அழித்துவிடும்
நெஞ்சினிலே சோர்வின்றி
ஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே

2.ஆழ்மனதில் படிந்திருக்கும்
பயத்தை போக்கிவிடும்
வறுமையிலே வாடி நிற்கும்
நிலையை அகற்றிவிடும்

மனம் தேடும் அமைதியினை
கொடையாய் பொழிந்தருளும்
அன்புடனே ஆர்வமுடன்
துத்திட அருள் தாரும்-தூய ஆவியே

3.சோதனையை கடந்து செல்ல
வழியை காட்டிவிடும்
பொறுமையுடன் காத்திருக்கும்
உறுதியை தந்தருளும்

எதிர்கொள்ளும் நாட்களெல்லாம்
ஒளியால் நிரப்பிவிடும்
உம்முடனே ஒன்றிணைந்து
நடந்திட பலம் தாரும்-தூய ஆவியே

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password