தேவா நீ என் வழியாய் இரு – Deva Nee En Vazhiyai Iru
Shop Now: Bible, songs & etc
தேவா நீ என் வழியாய் இரு – Deva Nee En Vazhiyai Iru
தேவா நீ என் வழியாய் இரு
நாதா நீ என் ஒளியாய் இரு
வழியாய் ஒளியாய் நீங்காதிரு
ஆனந்த பூங்காற்றில் கண்டேன்
உன் சாயல் மின்மினி போல் ஒளிரும் உன் இன்ப இதயம்
வழியாய் ஒளியாய் இரு -2
1.வாழும் வழியை காட்டும் இறைவா
நானும் அதிலே நடக்கின்றேன்
நீயும் என்னை தாங்கி நிற்க
என்னை நானும் மறக்கின்றேன்
நீங்காத உன் அன்பை எனக்கு தந்தாய்
அழியாத காவியமாய் நான் காப்பேன்
இறைவா இறைவா அன்பின் இறைவா
நீயே எந்தன் முதலும் முடிவாய் -2
2.காலம் முழுதும் காக்கும் இறைவா
காலடி பணிந்து தொடர்கின்றேன்
உன்னை பிரியா வரமும் தந்து
நிறைவாய் என்னில் வாழ்வாயே
நீயில்லையென்றால் நான் என்றும் இல்லை
நீதானே என்றென்றும் முதலும் முடிவும்
இறைவா இறைவா அன்பின் இறைவா
நீயே எந்தன் முதலும் முடிவாய் -2