தேவ கிருபை ஆசீர்வாதம் – Deva Kirubai Aaseervaatham

Deal Score+1
Deal Score+1

பல்லவி

தேவ கிருபை ஆசீர்வாதம்
தினமும் எங்களில் பெருகிட

சரணங்கள்

1. ஆவலாயும தோய்வு நாளில்
ஆலயந்தனில் பணிந்து புகழ
பாவ அறிக்கை செய்யும் ஜனங்கள்
பரனின் கிருபை பெற்று மகிழ – தேவ

2. ஆவலாய் எங்கள் ஆண் குழந்தைகள்
அழகான இள மரங்கள் போலவும்
பாவையர்களாம் பெண் குழந்தைகள்
பலத்த சித்திர அரண்கள் போலவும் – தேவ

3. எங்கள் மாடுகள் பலத்திருக்கவும்
இடுக்கணுள்ளே வராதிருக்கவும்
எங்கள் ஆடுகள் கிராமங்களிலே
லட்சங் கோடியாய்ப் பெருகி வரவும் – தேவ

4. எங்கள் பண்டகசாலை சகல
இன்ப வஸ்துக்கள் நிறைந்திருக்கவும்
பங்க வலசை பகலின் கூக்குரல்
பதியில் என்று மில்லாதிருக்கவும் – தேவ

5. ஆலயந்தனில் உமது வசனம்
அறிவிக்கும் போதக ரனைவருக்குள்ளும்
வேலை ஓய்ந்து பணியும் சபையார்
விரும்பிப் படிக்கும் சகலருக்குள்ளும் – தேவ

6. இத்தன்மையுடன் இருக்கும் ஜனங்கள்
இவர்கள் தாமென உலகம் சொல்லவும்
கர்த்தர் தெய்வமென் றிருக்கும் பாக்கியம்
கண்ட ஜனமென்றெம்மைச் சொல்லவும் – தேவ

7. உன்னதங்களின் இருக்கும் தெய்வத்தின்
உயர்ந்த நாமம் மகிமைப்படவும்
இந்நிலம் சமாதானம் பெற்றிட
இஷ்டம் மானிடர் மேலுண்டாகவும் – தேவ

8. இந்த வீட்டுக்குச் சமாதானம்
இன்ப சுகங்கள் அனைத்துண்டாகவும்
சந்ததியாய் நீடூழி வாழவும்
சபையனைவரும் துதித்திப் பாடவும் – தேவ

I யோவான் 5: 4. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

For whatsoever is born of God overcometh the world: and this is the victory that overcometh the world, even our faith.✝

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar#Apple Watch Series 6 #Apple Watch Series 5  #Apple iPhone 12 Pro  #Redmi Note 9 Pro
App Icon Apple Music
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password