நம் இயேசுவின் வருகை இன்று- Nam Yesuvin Varugai Intru

Deal Score+1
Deal Score+1

1. நம் இயேசுவின் வருகை இன்று
வெகு சமீபமாய்த் தெரிகின்றது
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
வெகு அவசியமாகின்றது

பல்லவி

ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்
ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்.

2. பாவத்தில் புரளுவதும்
மா சாபத்தில் முடியும் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே

3. தேவனைத் தள்ளுபவர்
மா வேதனை அடைவார் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே

4. அன்பினால் வரும் அழைப்பு
நல்லதோர் எச்சரிப்பு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே

5. தயவாக ஓடியே வா
கிருபையின் வாசல் உண்டு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே

சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல,

ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய

கற்பனையையே எழுதுகிறேன்;

அந்தப் பழைய கற்பனை நீங்கள்

ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.

மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன்,

இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது;

ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது,

மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.

Brethren, I write no new commandment unto you,

but an old commandment which ye had from the beginning.

The old commandment is the word which ye have heard from the beginning.

Again, a new commandment I write unto you,

which thing is true in him and in you:

because the darkness is past, and the true light now shineth.

I யோவான் : I_John :2

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

      Leave a reply

      The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
      Logo
      Register New Account
      Reset Password