நேச ராஜாவாம் பொன்னேசு – Nesa Raajavaam Ponneshu

Deal Score+1
Deal Score+1

1. நேச ராஜாவாம் பொன்னேசு நாதா
வாசமாய் இம்மன்றல் சிறந்தோங்க
ஆசையோடெழுந்து அன்பின் நாதா
தேசு நல்குவீர் சுகம் நூங்க.

பல்லவி

நித்யானந்த செல்வம் நிறைவாரி
சத்ய சுருதியின் மொழிபோல் – உம்
சித்தமாகிப் பெய்யும் அருள் மாரி
நித்தம் எமின் கண்மணிகள் மேல்

2. பிரபை சூழ்ந்த பாக்யம் ஈயும் நேயா
பிரியம் தோய்ந்த செல்வம் யாவும் கூட – நல்
ஸ்திரமாக உந்தன் பாதம் சார்ந்து
கிருபை ஊக்கமோடென்றும் தேட – நித்யா

3. தேவ சேவைக்கான மேல் வரங்கள்
சேயர் மீதேராளமாகத் தங்க
ஜீவ காருண்யரின் பொற்குணங்கள்
செல்வர் ஜீவியத்தில் விளங்க – நித்யா

4. ஆசி தாரும் அன்பரிரு பேர்க்கும்
அருள் ப்ரபை இவர் மேலே வீசும்
நேசர்க்கும் முகப்பிரசன்னம் நல்கும்
நீர் மெய்ச் சமாதானம் ஈயுமேன் – நித்யா

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password