பாடியே துதிப்போம் பாதமே – Paadiyae Thuthipom Paathame

Deal Score0
Deal Score0

பாடியே துதிப்போம் பாதமே – Paadiyae Thuthipom Paathame

பேராயக் கீதம்

பல்லவி

பாடியே துதிப்போம் பாதமே தொழுவோம்,
நாடியே இயேசு நாமமே புகழ்வோம்.

அனுபல்லவி

தேடி வந்து மீட்டதினால்
தேவன் நம்மைக் காப்பதினால்
கோடி நன்றித் தோத்திரங்கள்
கூடி ஒன்றாய் நாம் படைப்போம்.

சரணங்கள்

1.தென்னிந் தியாவின் திருச்சபை தோன்றச்
செய்தது இலண்டன் மிசனெறிச் சங்கம்,
ரிங்கல்தோபே, வேதமாணிக்கம்
இங்கரும் திருச்சபை எழும்பஅர்ப் பணித்தார்.-பாடி

2.திருமு ழுக்குத் திடப்ப டுத்தல்
தேவநற் கருணைத் தூயரில் பெற்று,
அருமப் போஸ்தலர் நிசேயா காட்டும்
அரும்திரித் துவத்தை அகமதில் ஏற்போம்.-பாடி

3.சுதேச அருட்பணி, சனனாப் பணியும்
சுவிசே சத்தை ஜெபக்குழு மலையில்
நிதமும் பரம்பச் செய்திடும் பணியும்
நிலைபெற ஜெபிப்போம் கொடுப்போம் செல்வோம்.-பாடி

4.ஆயர் போதனை ஆன்ம மீட்பு,
அருமைச் சிறுவர், வாலிபர், பெண்கள்
நேயச் செயல்கள் மனித உரிமை
நேர்த்தியாய் நிலைபெற அர்ப்பணித் துழைப்போம்.-பாடி

5.ஆதி வாசி, அங்கம் குறைந்தோர்,
ஆதர வற்ற பெண்கு ழந்தை,
பாதித் திட்ட நலிந்தோர் தலித்து
பயன்பெறத் தொண்டு பாசமாய்ச் செய்வோம்.-பாடி

6.கல்வி, மருத்துவம், தொண்டுப் பணிகள்
காப்பகம், உழைக்கும் தொழிற்கூடங்கள்
நல்ல சமாரிய நற்பணி புரிய
நல்லா வியரின் வல்லமை பெறுவோம்.-பாடி

7.வளரும் திருச்சபை அன்பினில் பெருகி,
வருகையில் சாட்சியாய் எதிர்கொண் டேகி,
அளவிடும் தீர்ப்பில் அனைவரும் தேறி,
ஆண்டவ ருடனே நித்தியம் வாழ்வோம்.-பாடி

Paadiyae Thuthipom Paathame song lyrics in english

Paadiyae Thuthipom Paathame Thozhuvom
Naadiyae Yesu Naamamae Pugalvom

Theadi Vanthu Meetathinaal
Devan Nammai Kaapathinaal
Koadi Nantri Thothirangal
Koodi Ontraai Naam Padaippom

1.Thenninthiyavin Thirusabai Thontra
Seithu Landan Misaneari Sangam
Ringalthobae Vedha Maanikkam
Engarum Thirusabai Elumba Arpanithaar

2.Thirumulukku Thidapaduththal
Deva Narkarunai Thooyaril Pettru
Aruma Pothasthalar Niseaya Kaattum
Arum Thiri Thuvaththai Agamathil Yearpoam

3.Sutheasa Arutpani Sananaa Paniyum
Suvi Seaththai Jebakulu Malaiyil
Nithamum Paramba Seithidum Paniyum
Nilaipera Jebippoam Koduppom Selvom

4.Aayar Pothanai Aanma Meetpu
Arumai Siruvar Vaalibar Pengal
Neaya Seyalgal Manitha Urimai
Nearthiyaai nilaipera Arpanithu Ulaippoam

5.Aathi Vaasi Angal Kurainthoar
Aatharavattra Pen Kulanthai
Paathithitta Nalinthoar Thalithu
Bayan Pera Thondu Paasamaai Seivom

6.Kalvi Maruthuvam Thondu Panigal
Kaappagam Ulaikkum Tholirkoodangal
Nalla Samaariya Narpaniya Puriya
Nalla Viyarin Vallamai Peruvom

7.Valarum Thirusabai Anbinil Perugi
Varugaiyil Saatchiyaai Ethirkondeagi
Alavidum Theerppil Anaivarum Theari
Aandavarudane Niththiyam Vaalthuvom

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo