பாடுபட்ட யேசையா பட்டபலன் -Paadupatta Yeasaiya Pattapalan
Shop Now: Bible, songs & etc
1. பாடுபட்ட யேசையா பட்டபலன் தாருமையா
கேடுகெட்ட மானிடர்மேல் கிருபை பரிபாலித்தாய்
2. கள்ளனைக் கண்பார்த்து விண்ணில் சேர்த்த கருணாகரா
சொல்லி முடியாத பாவம் செய்த கள்ளன் நானையா
3. கொன்ற பொல்லாத யூதருக்காய் மன்றாடின மேசையா
நன்றிகெட்ட பாவி எந்தன் ரண்டகங்களை தீரையா
4. மறுதலித்த சீடனுக்கு மாப்புச் செய்த ஆவண்டவா
பொறுதிவைத்தென் பாவமுற்றும் போக்கியருளப்பனே
5. முட்கிரீடம் தாங்கி ஜீவ பொற்கிரீடம் வாங்கினீர்
துட்டனுக்கும் ஒரு சிறிய பொற்கிரீடம் தா ஐயா