வந்திடுவீர் தேவா வல்லமையாய் -Vanthiduveer Deva Vallamaiyai
Shop Now: Bible, songs & etc
வந்திடுவீர் தேவா வல்லமையாய்
தந்திடும் எழுப்புதல் ஆவியினால் (2)
சிந்தையில் மெல்கிசேதேக் முறைமை(2)
சந்ததம் நிலைத்திட அருள் புரிவீர் (2)
ஊற்றிடுவீர் தேவ அன்பினையே
சுத்தர் உள்ளம் உயிர்த்திடவே
எம்மை மாற்றிடும் அபிஷேகத்தால் (2)
2.ஜீவனின் முடிவில்லாதவரே
தேவ குமாரனைப் போன்றவரே
சோதனையில் அழியாதெம்மையே
சோர்ந்திடாதே நிலைக்க வருவீர் – ஊற்றிடுவீர்
3.தந்தையும் தாயும் சகோதரரும்
சந்ததி எதுமில்லாதவர் நீர்
எந்தையே உம்மைப்போல் மாற்றிடவே
ஈந்திடும் மெல்கிசேதேக் இகத்தில் – ஊற்றிடுவீர்
4.தேவ குமாரனும் பாடுகளால்
ஜீவனை ஊற்றி கீழ்படிந்ததினால்
தாரணியில் அவர் போல் நிலைக்க
தந்திடும் மெல்கிசேதேக் முறைமை – ஊற்றிடுவீர்
5.நித்திய மான ஆசாரியரே
சத்திய வெளிப்படுத்துதல் நிறைவாய்
பெற்று நாம் நித்திய ஆசாரியராய்
கர்த்தனாம் இயேசுவுடன் நிலைக்க – ஊற்றிடுவீர்
More Songs
Tags: Tamil SongsVவ