
வாருமே இயேசு பாதம் சேருமே- Varumae Yesu Paatham searumae
Deal Score+1
பல்லவி
வாருமே, இயேசு பாதம் சேருமே
பாரில் பாவம் தீருமே
அனுபல்லவி
வாரும் யாரையும் தள்ளேனென்று வாக்கு அன்பாய்க் கூறினாரே
1. பாவமே அது பொல்லா விஷமே அது உன்னை நாசமாய்ப்
போகச் செய்வதும் தீ நரகினில்
வேகச் செய்யுமே எந்தக் காலமும் – வாருமே
2. மரணமே நினையா நேரமே பிரிவினை செய்யுமே
தருணம் போக்காதே கிருபை தாங்குது
இது சமயம் தேடு ஜல்தியில் – வாருமே