போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல்

Deal Score0
Deal Score0

போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல்

Do you have to fight and pray? Struggle is the key to success

ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள், அருமையான தேவ பிள்ளைளே உங்கள் வாழ்க்கையை மாற்றும் அற்புத சக்தி , நீங்கள் ஜெபிக்கின்றன ஜெபத்தில் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள் .

போராடி ஜெபிப்பது தேவையா ? ஏன் போராடி ஜெபிக்க வேண்டும் ?

ஜெபத்திலேயே நாம் ஏன் அப்படி போராட வேண்டும் என்பதை குறித்தெல்லாம் மக்களுக்கு பல்வேறு சிந்தனைகள் இருக்கின்றன.

பவுல் ரோமருகு எழுதின நிர்பத்திலே (ரோமர் 15 : 31-32) பதினைந்தாம் அதிகாரம் முப்பத்தி ஒன்று முப்பத்தி இரண்டாம் வசனங்களில் இப்படியாக சொல்கிறார்

நீங்கள் தேவனை நோக்கி செய்யும் ஜெபங்களில் நான் போராடுவது போல நீங்களும் என்னோடை கூட போராட வேண்டும் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன் .

அருமையான தேவ பிள்ளைகளை பவுல் என்ன சொல்கிறார் பாருங்கள்..

அவர் ஒரு பெரிய அப்போஸ்தலன் பெரிய மகிமையாக அப்போஸ்தலன் .

நீங்கள் தேவனை நோக்கி செய்யும் ஜெபங்களில் நான் போராடுவது போல நீங்களும் என்னோடை கூட போராட வேண்டும் .

ஏன்’யா போராட வேண்டும்? பவுல் எந்த காரணத்திற்காக போராடி ஜெபிக்க வேண்டும் என்று சொல்கிறார், பார்த்தீர்கள் என்றால்..

முப்பத்தி ஒன்றாம் வசனத்தில் – யுதேயாவில் இருக்கிற அவிச்சுவாசிகளுக்கு நான் தப்பும் படிக்கும்,

எருசலெமிலில் உள்ள பரிசுத்தவான்களுக்கு செய்யபோகின்ற , தர்ம சகாயம் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டும் படிக்கும் நீங்கள் இப்படியாக போராடி ஜெபிக்க வேண்டும் என்று சொல்லுகிரார்.

அருமையான தேவ பிள்ளைகளே, போராடி ஜெபிப்பதின் மூலமாக உங்களுடைய வாழ்க்கையின் சூழ்நிலைகள் மாறும் .

போராடி ஜெயிப்பதின் மூலமாக , நிச்சயமாக நீங்கள் பதிலை பெற்றுக் கொள்கிறீர்கள் .

சிலர் நினைக்கிறார்கள் , தேவன் நம்முடைய தேவன். நம்முடைய பிதா . அவரிடம் போய்.. நம்முடைய தகப்பனிடம் போய் நாம் ஏன் போராடி ஜெபம் பன்னவேண்டும் ? போராடி ஜெபித்தால் கிடைத்துவிடுமா ?

போராடி ஜெபிச்சா காரியம் நடந்து விடுமா , போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா ? என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .

இங்கு பாருங்கள் , நம்முடைய கர்த்தர் இந்த பூமியிலே மாமிசத்திலிருந்த நாட்களிலே அவருடைய அனுபவத்தை நாம் பார்த்தோமானால்

லூக்கா ஆறாம் அதிகாரம் பதினொன்று மற்றும் பன்னிரெண்டு வசனங்களை வாசித்தீர் என்றால்,

ஜனங்கள்.. பரிசேகரும் வேதபாரகரும் மற்றும் வேத வல்லுனர்களும் என்ன செய்கிறார்கள், அவரை கொலை செய்ய வகை தேடுகிறார்கள் .

இவரை என்ன செயலாம் ? இவரை அழிக்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானம் பண்ணிக்கொண்டு இருக்கும்பொழுது வேதம் இப்படியாக சொல்கிறது,

அவர்கள் மூர்க்க வெறிகொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரை ஒருவர் ஆலோசித்தார்கள் .

அந்த நாட்களிலேயே இயேசு என்ன பண்ணினாராம்.. ஜெபம் பண்ணும் படி ஒரு மலையின் மேல் ஏறி, இரவு முவதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார் என்று பார்க்கிறோம் .

அருமையான தெய்வ பிள்ளைகளே பாருங்க , இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டஇருந்தார் .

ஐயா , இரவு முழுவதும் ஜெபிக்கிறது என்றால் எத்தனை ஒரு சாதாரண விஷயம் என்று நினைத்தால், நீங்கள் அப்படி ஜெபிக்க இல்லை என்று அர்த்தம் .

இரவு முழுவதும் ஜெபிப்பதற்கு ஒரு நல்ல ஒரு வைராக்கியம் வேண்டும் . ஒரு வேகம் வேண்டும் . ஊக்கம் வேண்டும் . அது போராடி ஜெபிக்க வேண்டியது இருக்கும் .

ஏனென்றால் ஜெபிக்கு அதற்கே போராட வேண்டியது இருக்கிறது .

தூக்கம் வரும், கஷ்ட்டம் வரும், பிரச்சனைகள் வரும் மற்றும் பல்வேறு சிந்தனைகள் வந்து மோதும்.

உடல் சரிர பலவீனங்கள் வந்து மோதும் . அத்தனையும் மீறி இருந்தாதான் இரவு முழுதும் ஜெபிக்க முடியும் .

இத்தனை மகிமையானது ஒரு தேவ குமாரன். அந்த அற்புதமான தேவ குமாரன் தேவனை நோக்கி எப்படி ஜெபம் பன்றாரு ?இரவு முழுவதும் !

ஏனென்றால் ஒரு பக்கத்தில் மூர்க்க வெறி கொண்டு அவர்கள் இயேசுவை என்ன செய்யலாம் என்றும் எப்படி கொல்லலாம் , எப்படி அளிக்கலாம் , எப்படி துரத்தலாம் என்று அலையும் பொழுது

இப்படியாக ஜெபம் பன்னும்படியாக மலையில் ஏறினார் என்று வேதத்தில் பார்கிரோம்.

அருமையான தேவ பிள்ளைகளே, உங்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கலாம், எத்தனையோ சோர்வுகள் இருக்கலாம் ,

ஒருவேளை உங்க கணவனுக்கு வந்து ஆபத்துக்கள், உங்க தொழில், குடும்பத்தில், கடன் மூலமாக , குடும்ப பிரச்சனைகள் மூலமாக எத்தனையோ ஆபத்துக்கள் வந்திருக்கலாம் .

எல்லாவற்றிலும் இருந்து ஜெயம் கொள்வதற்கு எடுக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய ஆயுதம் இருக்கிறது .

அது தேவனை நம்பி, விசுவாசித்து நீங்க்ள் ஜெபிக்கவேண்டும் . அவரை நோக்கி ஜெபிக்கும் பொழுது உங்கள் காரியங்கள் எல்லாம் மாறுதலாய் முடியும் .

ஆமான் போன்றவர்கள் உங்கள் எஸ்தருகு விரோதமாக சூழ்ச்சி செய்தது போல, உங்களுக்கு விரோதமாக ஜனங்கள் செய்கின்ற சூழ்ச்சிகளில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்வதற்காக ஜெபிக்க வேண்டும்.

எரிக்கும் கோட்டைகள் உங்களுக்கு முன்பாக இருக்கலாம் . ஒருவேளை நீங்கள் தப்பி செல்ல முடியாத மகா பயங்கரமான கோட்டை போன்ற மறைவுகள் இருக்கலாம் .

உங்களுக்கு முன்பாக பர்வதங்கள் இருந்து கொண்டிருக்கலாம் . பர்வதங்கள் போன்ற பிரச்சனைகள் நின்று கொண்டு இருக்கலாம் .

கர்த்தரை நோக்கி நீங்கள் ஊக்கமாக ஜெபிக்கும் பொழுது நடப்பது என்ன ?

அந்த பர்வதங்களை, மலைகளை நீங்கள் மிதித்து குன்றுகளை பதருகு ஒப்பாகி விடுவீர்கள் .

உங்களுக்கு விரோதமாக இருக்கிற எல்லா சவால்களயும், மலையை நொறுக்குவது போல மிதித்து நொறுக்குவீர்கள் என்று வேதத்தில் சொல்லப்படுகிறது .

ஜெபத்தின் மூலமாக அரண்களை நிர்மூலமாக்கிவிட முடியும்

ஜெபத்தின் மூலமாக உங்களுக்கு விரோதமாக இருக்கின்ற ஏரிகோ கோட்டைகள் நொறுங்கி போகும் அருமையானவர்களே.

லூக்கா இருபத்தி இரண்டாம் அதிகாரம் நாற்பத்திரண்டு வசனத்தில்

ஆண்டவர் சிலுவை பாடுகளுக்கு போகும் முன்னாடி அவர் தேவனை நோக்கி ஒரு வேண்டுதல் செய்தார். என்ன ஜெபம் பண்ணினார் என்று எழுதப்பட்டுள்ளது ?

அதாவது பிதாவே உமக்கு சித்தமானால் இந்த பாத்திரம் என்ன விட்டு நீங்கும் படி செய்யும் என்று கேட்கிறார் .

ஆயினும் என்னுடைய சித்தத்தின் படி அல்ல உம்முடைய சித்தத்தின் படியே ஆக கடவது என்று ஜெபம் பண்ணினார்.

நல்லா கவனிங்க..அடுத்த வசனத்தில் அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி அவரை பலப்படுத்தினார்.

ஐயா ஒரு ஜெபம் பண்ணினார், அப்பொழுது வானத்தில் இருந்து ஒரு தூதன் வந்து அவரை பலபடுத்தினார் . படுத்தினபின் என்ன நடந்தது ?

அப்பறம் அடுத்த வசனத்தில் பாருங்கள் . அவர் மிகவும் வியாகுல பட்டு, அதிக ஊக்கத்தோடு ஜெபம் பண்ணினார்.

தூதனே வந்து பலப்படுத்தியிருச்சு, பிறகு இனத்திற்கு ஜெபம்? ஜெபத்தை நிறுத்தி விடலாமா ?

இல்லை ஊக்கமாய் ஜெபிப்பதைற்கு ! ஊக்கமாக ஜெபிப்பதற்கு அந்த தூதன்அவரை பலப்படுத்தி இருக்கிறார் . ஏனென்றால் எல்லாமே ஜெபத்திலன் மூலமாகத்தான் நடக்கும்.

எல்லாமே நாம் தேவனுக்கு தெரியப்படுத்தனும் தேவன் ஜெபத்திற்கு பதில் கொடுப்பார் .

நம்முடைய காரியங்களை, நமக்கும் தேவனுக்குள் உள்ள தொடர்பு ஜெபம் தான்.

நாம் எந்த சூழ்நிலைமையில் இருக்கின்றோமோ அதை நாம் கர்த்தருக்கு தெரியப்படுத்தும் பொழுது, அவர் நமக்கு பதில் அனுப்புகிறார் .

அதற்காக அவருடைய கண்களும் செவிகளும் நமக்காக திறந்தே இருக்கிறது.

அந்த தூதன் வந்து பல படுகின்ற பிறகு , அவர் மிகவும் வியாகுலபட்டு அதிக ஊக்கத்தோடு ஜெபம் பண்ணினார் .

அவருடைய வேர்வை இரத்தத்தின் பெரும் துளிகளாய் தரையில் விழுந்தது . எப்படி பட்ட ஜெபம் பாருங்கள். ஊக்கத்தொடு என்ன ஜெபம் பண்ணி இருக்கிறார் !

நம்முடைய கர்த்தரும் ஆண்டவரும் ஆகிய அருள்நாதர் இயேசு கிறிஸ்துவே இப்படி ஜெபம் பண்ணி இருக்கிறார் என்றால்.. நம்முடைய பிள்ளைகள், அவருடைய சீடர்கள் நாம் எப்படி ஜெபம் பண்ண வேண்டும்.

அருமையான தேவ பிள்ளைகளே, கவலைப்படாதீர்கள் – எந்த பிரச்சனை வந்தாலும் சரி .

இன்னும் பாருங்கள், எபிரேயர் ஐந்தாம் அதிகாரம் ஏழு எட்டு வசனத்தை பார்த்தீர்கள் என்றால்

அவர் மாமிசத்திலிருந்த நாட்களில் தம்மை மரணத்திலிருந்து இரட்சிக்க வல்லமை உள்ளவரை நோக்கி , பலத்த சத்தத்தோடு, கண்ணீரோடு விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல் செய்து தமக்கு உண்டான பயபக்தி நிமித்தம் கேட்கப்பட்டு ,

அவர் குமரனாய் இருந்த பிறகும், பட்ட பாடுகள் முலமாய் கீழ்ப்படிதலை கற்றுக் கொண்டார் என்று வேதத்திலே பார்கிரோம்.

அவர் பலத்த சத்தத்தோடு, கண்ணீரோடு விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல் செய்தார். தமக்கு உண்டான பயபக்தி நிமித்தம் கேட்கப்பட்டார்.

ஜெபிக்கும்போது யார் என்ன சொன்னாலும் சரி , ஜெபத்தை மட்டும் விட்டுவிட்டார்கள் . ஊக்கமாக ஜெபிக்கும் பொழுது..

வேதம் சொல்கிறது நீதிமான் செய்யும், தேவ பிள்ளைகள் செய்யும் ஊக்கமான ஜெபம் மிகவும் பலன் உள்ளதாய் இருகிறது.

ஓரு சபையார் ஊக்கமாக ஜெபித்த பொழுது, பேதுரு இருந்த சிறைச்சாலையின் கதவுகள் தானாய் திறந்தது .

அவர் ஊக்கமாக ஜெபித்த பொழுது , அவர் கைய்களில் கட்டப்பட்டு, சரீரம் முழுவதும் கட்டப்பட்ட இரண்டு சங்கிலிகள் தானாய் விழுந்தது என்று பார்கிரோம் அருமையான தேவபிள்ளைகளே.

எத்தனை ஒரு அற்புதமான காரியம் ! ஜெபத்தை தவர விட்டு விடாதீர்கள் . என்ந் என்ன சூழ்நிலை இருக்கலாம், எந்த நிலைமை இருக்கலாம் , என்ன கொடுமைகளும் வாழ்க்கையில் வந்திருக்கலாம்..

எத்தனாயிரம் பிரச்சனைகள் இருந்திருக்கலாம், எல்லாவற்றிலும் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்வதற்கு செய்ய வேண்டிய ஒரு முக்கியமான காரியம் ஜெபம்.

ஜெபம், ஆவிக்குரிய வாழ்க்கையை மாற்றும். ஜெபம், உங்கள் சூழ்நிலைகளை மாற்றும். ஜெபம், உங்களை எல்லாம் தோல்விகளில் இருந்து வெற்றி சிறக்க செய்யும்.

ஜெபத்தோடு காத்திருக்கின்ற பிள்ளைகள், ஒரு நாள் புது பலன் அடைவார்கள் . புது பலன் அடைந்து கழுக்குகளை போல இறக்கைகளை அடித்து உயர எழும்புவீர்கள்.

எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, எல்லா சாதாரண ஜனங்களுக்கு மத்தியில் இருந்து

நான் பெருசு, நீ பெருசு.. என்னால் முடியும் உன்னால் முடியும் என்று பெருமை பேசிக் கொண்டு,

விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கிற ஜனங்கள் மத்தியிலே ஜெபிக்கிற மகனை மகளே ! நீ ஒருவேளை கருத்திற்கு காத்துக்கொண்டு ஜெபித்துக்கொண்டே இருப்பாயானால்..

புது பலன் அடைந்த கழுகுகளை போல இறக்கைகளை அடித்து உயர எழும்புவீர்கள்.

உங்கள் தொழில், கையில் பிறையாசம், உங்கள் பிள்ளைகள் வளர்ந்து, வாழ்ந்து செழித்து இருப்பார்கள் . உயர உயர பறப்பார்கள். கர்த்ததர் உங்களை ஆசிர்வதிப்பார் – மேன்மை படுத்துவார்.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் னாலே உங்களை வாழ்த்துகிறேன் . ஆமேன்.

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo