மழலை மன்னனே – Mazhalai Mannaney Tamil Catholic Christmas Song Lyrics
மழலை மன்னனே மகிழ்ச்சியின் வேந்தனே மாசில்லதா எங்கள் கன்னி மரி பாலனே மாடடை குடிலிலே மந்தைகள் நடுவிலே மானிடராக பிறந்த குழந்தை ஏசு பாலனே
மண்ணகம் மகிழுது விண்ணகம் புகழுது ஏசு உன் பிறப்பினில் இதயம் மகிழுது இருளும் விலகுது அருளும் நிறையுது பாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குது
பாலா உன் வருகையால் புது ஒளி பிறக்குது
சின்ன பாலாக என் செல்ல பாலாக என் உள்ளத்தில் பிறந்தாய் என் இல்லத்தில் வாழ குளிர் நடுங்கும் இரவினில் சிறு கந்தை துணியினில் நீ கண்ணுறங்கிடு வான் தூதர் தாலாட்ட..
பாவம் போக்கிட பாரினில் பிறந்தவா தாழ்மையை ஏற்று வாழ்வில் மேன்மையை அளித்தவா ஏழை கோலத்தில் தொழுவத்தில் பிறந்தவா ஏங்கும் மனிதருக்கு அமைதியை பகிர்ந்தவா அன்பின் பாதை காட்டிடு எந்தன் சொந்தமாகிடு உன் வழியில் நடத்திடு என் வாழ்வை மாற்றிடு
சின்ன பாலாக என் செல்ல பாலாக என் உள்ளத்தில் பிறந்தாய் என் இல்லத்தில் வாழ குளிர் நடுங்கும் இரவினில் சிறு கந்தை துணியின் நீ கண்ணுறங்கிடு வான் தூதர் தாலாட்ட
விண்ணக தூதர்கள் மகிழ்ச்சி கீதம் பாடிட
மன்னக மனிதருக்காய் மாட்டுக்குடிலில் பிறந்தவ
மனுக்குளம் மீட்படைய மனிதனாக வந்த வா இறைவனில் ஆட்சி அமைய அன்பின் பாதை தேர்ந்தவ
விண்ணில் தூதர் வாழ்த்திட மன்னன் மழலையாகிட உலகம் ஒளியில் நிறந்தது உள்ளம் இன்று மகிழுது
சின்ன பாலாக என் செல்ல பாலாக என் உள்ளத்தில் பிறந்தாய் என் இல்லத்தில் வாழ குளிர் நடுங்கும் இரவினில் சிறு கந்தை துணியினில் நீ கண்ணுறங்கிடு வான் தூதர் தாலாட்ட
Mazhalai Mannaney Lyrics in English
மழலை மன்னனே பாடல் வரிகள், Mazhalai Mannaney Song Lyrics
- அதிசய வெள்ளி வானிலே – Athisaya Velli Vaanilae
- சுந்தர குயில்கள் பாடும் – Sundara Kuilkal Paadum
- நல்ல காலம் பொறந்துடுச்சு – Nalla Kaalam Poranthuduchu
- வானத்திலே விண்மீன் – Vaanathilae Vinmeen
- பிறந்தாரே நமக்காகவே – Pirandhaarae namakkagavae
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Catholic Christmas song ‘மழலை மன்னனே – Mazhalai Mannaney’.
- It celebrates the joy of Jesus’ birth, highlighting themes of peace, humility, and love.
- The lyrics express a deep emotional connection to the newborn Jesus and depict the heavenly rejoicing surrounding His birth.
Estimated reading time: 2 minutes

