நல் மீட்பர் இயேசு நாமமே-Nal Meetpar Yesu Namamae

Deal Score+1
Deal Score+1

1. நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்;
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்!

பல்லவி

இயேசுவின் நாமம் நேசிக்கிறேன்!
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன்!
இயேசுவின் நாமமே!

2. அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே;
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தைத்
திடப்படுத்துமே! – இயேசுவின்

3. பசித்த ஆத்மாவுக்கு
மன்னாவைப் போலாகும்
இளைத்துப் போன ஆவிக்கு
ஆரோக்யம் தந்திடும்! – இயேசுவின்

4. என் இரட்சகா என் கேடகம்!
என் கோட்டையும் நீரே!
நிறைந்த அருள் பொக்கிஷம்
அனைத்தும் நீர் தாமே! – இயேசுவின்

5. என் ஜீவன் போகும் நேரமும்
உன் நாமம் பற்றுவேன்;
எப்போதும் அதைப் பாடவும்
விண் கரை ஏறுவேன்! – இயேசுவின்

Nal Meetpar Yesu Naamamae
En Kaathu kinbamaam
Pun patta Nenjai Aattavae
Oottrunda thailamaam

yesuvin Naam Neasikirean
Neasikirean Neasikirean Neasikirean
Yesuvin Naamamae

Annaamam Naintha Aaviyai
Nantraka Thettrumae
Thukkathal Thontha Ullathai
thidapaduthumae – Yesuvin

Pasitha Aathumauvkku
Mannavai Polagum
Elaithu Pona Aavikku
Aarokkiyam Thanthidum – Yesuvin

En Ratchaka En Kedakam
En koottaium Neerae
Nirantha Arul Pokkisam
Anaithum Neer Thaamae – Yesuvin

En Jeevan Pogum Nearamum
Un Naamam Pattruvean
Eppothum Athai Paadaum
Vin Karai Yearuvean – Yesuvin

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

Leave a reply

WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications