ஓர் ஏழை வீட்டில் நான்-Oor Yealai Veettil Naan

Deal Score+1
Deal Score+1

1. ஓர் ஏழை வீட்டில் நான் சென்றேன்!
அங்கே மா இன்பம் நான் கண்டேன்
தரித்திரர் ஆனாலும்
சொன்னாள் அங்குள்ள விதவை;
என்னின்பத்திற்கு உதவி
இயேசு எனதெல்லாம்

பல்லவி

இயேசுவே எனதெல்லாம்
ஆம்! இயேசுவே எல்லாம்

2. இரட்சிப்பை மற்றோர்க்குச் சொல்ல
துன்பப் பாதையில் தாம் செல்ல
தத்தம் செய்தோர் எல்லாம்
தாகம் பசி சுவை யில்லை
என்றார் எம் இன்பக் கன்மலை
இயேசு எனதெல்லாம் – இயேசுவே

3. மூர்க்கர் வெறியர் மத்தியில்
மீட்பரின் நேசம் சொல்கையில்
பட்ட துன்பம் பார்த்தோம்!
ஆனால் அவர்கள் வதைகள்
மா இன்பமாய்ச் சகித்தார்கள்
அவர்க் கேசு எல்லாம் – இயேசுவே

4. மரண நதி நெருங்கி
நோய்கள் வந்தாலும் நடுங்கி
திகைக்காமல் செல்வோம்!
எங்கள் யுத்தம் முடிந்தது
சஞ்சல நாள் முடிந்தது
ஆமென் இயேசு எல்லாம்! – இயேசுவே

11. உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.
For I am with thee, saith the LORD, to save thee: though I make a full end of all nations whither I have scattered thee, yet will I not make a full end of thee: but I will correct thee in measure, and will not leave thee altogether unpunished.

எரேமியா:Jeremiah :30:11
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

   Leave a reply

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password
   Accept for latest songs and bible messages
   Dismiss
   Allow Notifications