சேற்றில் நான் இருந்தேன்-SETRIL NAAN IRUNDHAEN

Deal Score+1
Deal Score+1

சேற்றில் நான் இருந்தேன்
கன்மலை மேல் நிறுத்தி
கால்களை ஸ்திரப்படுத்தினீர்
கூட்டுக்குள் இருந்தேன்
கலைத்து எறிந்து
உயரே பறக்க செய்தீர்

பெலனை தந்தீர் அபிஷேகம் செய்தீர்
ஆவியில் மிதக்க வைத்தீர்-2
தகப்பனே நீர் உண்மையுள்ளவர்
தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2

1.மண்தரையில் நடந்திட நேரம்
மன்னா கொண்டு போஷித்தீரே
காட்டில் நான் அலைந்திட்ட நேரம்
என்னை காகம் கொண்டு போஷித்தீரே

தாயின் கருவில் என்னை தெரிந்துகொண்டு
தீமைக்கு விலக்கிவிட்டீர்-2
தகப்பனே நீர் உண்மையுள்ளவர்
தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2

2.உம் வார்த்தையின் வல்லமையினால்
என் காலங்களை பார்க்க செய்தீர்
உம் கிருபையின் மேன்மையினால்
என் சிந்தை எல்லாம் மாற செய்தீர்

பரிசுத்த ஆவியின் வல்லமை தந்து
வானங்களில் பறக்க செய்தீர்-2
தகப்பனே நீர் உண்மையுள்ளவர்
தகப்பனே நீர் என்றும் நல்லவர்-2-சேற்றில் நான்

10/8/2020 Update
✝️🎊6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல்,
எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை
ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும்
வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
Be careful for nothing;
but in every thing by prayer and supplication with thanksgiving
let your requests be made known unto God.
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்
உங்கள் இருதயங்களையும் உங்கள்
சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
And the peace of God, which passeth all understanding,
shall keep your hearts and minds through Christ Jesus.
பிலிப்பியர் : Philippians 4:6 👏
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

   Leave a reply

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password
   Accept for latest songs and bible messages
   Dismiss
   Allow Notifications