உம் நாமம் உயரணுமே – Um naamam uyaranume
Shop Now: Bible, songs & etc
உம் நாமம் உயரணுமே
உம் அரசும் வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே
அப்பா பிதவே அப்பா (4)
1.அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்
எனக்குத் தாரும் ஐயா
2.பிறர் குற்றம் மன்னித்தோம் ஆதலால் எங்கள்
குறைகளை மன்னியுமே
3.சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா
4.ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம்
5.ஜாதிகள் ஒழியணும் சண்டைக ஓயணும்
சமாதானம் வரணுமே
6.ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே
7.ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க
ஆர்வம் தாருமையா
8.என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
இரட்சிப்பு அடையணுமே
9.அரசியல் தலைவர்கள் M.L.A., M.P க்கள்
உம்மை அறியணுமே, உம் நாமம் சொல்லணுமே