வல்லமை அருள் நிறைவே வாரும்-Vallamai Arul Niraive vaarum

Hannah John
Deal Score+1
Deal Score+1

வல்லமை அருள் நிறைவே வாரும்
பின்மாரி பொழிந்திடுமே
தேவ ஆவியே தாகம் தீருமே
வல்லமையால் இன்று எமை நிரப்பிடுமே

சரணங்கள்

1. புது எண்ணெய் அபிஷேகம்
புதுபெலன் அளித்திடுமே
நவமொழியால் துதித்திடவே
வல்லமை அளித்திடுமே – வல்லமை

2. சத்திய ஆவியே நீர்
நித்தமும் நடத்திடுமே
முத்திரையாய் அபிஷேகியும்
ஆவியின் அச்சாரமாய் – வல்லமை

3. அக்கினி அபிஷேகம்
நுகத்தினை முறித்திடுமே
சத்துருவை ஜெயித்திடவே
சத்துவம் அளித்திடுமே – வல்லமை

4. தூய நல் ஆவிதனை
துக்கமும் படுத்தாமல்
தூய வழி நடந்திடவே
பெலன் தந்து காத்திடுமே – வல்லமை

5. பெற்ற நல் ஆவிதனை
காத்திட வரம் தாரும்
ஆவியினால் நடந்திடவே
ஆளுகை செய்திடும் – வல்லமை

6. உலர்ந்திடும் எலும்புகளும்
உயிர்பெற்று எழும்பிடவே
எழுப்புதலை கண்டிடவே
வல்லமை அளித்திடுமே – வல்லமை

#Keyboard #Piano #Recorder #Classical Guitar #Drum set #Electric Guitar #Violin #Percussion #Bass Guitar #Saxophone #Flute #Cello #Clarinet #Trumpet #Yamaha DTX #Soundbar
We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password