விடுதலை விடுதலை பெற்றேன் – Viduthalai Viduthalai Pettrean Lyrics
Shop Now: Bible, songs & etc
விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
விதவிதமாய் பாவத்திலே ஜீவித்த நானே
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை
1. தடுக்கும் பாவத் தளைகளில் விடுதலை
கொடுக்கும் தீய பழக்கத்தில் விடுதலை (2)
என்ன சந்தோஷம் இந்த விடுதலை (2)
எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம் (2) – விடுதலை
2. எரிக்கும் கோபப் பிடியினில் விடுதலை
விதைக்கும் தீய பொறாமையில் விடுதலை
அன்பர் இயேசுவே தந்த விடுதலை
இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே – விடுதலை
3. அடுக்காய் பேசும் பொய்யினில் விடுதலை
மிடுக்காய் வீசும் பெருமையில் விடுதலை
ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே
தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே – விடுதலை
More Songs
Tags: Tamil SongsVவி