இயேசுவை நம்பினோர் – Yesuvai Nambinor Tamil christian song lyrics and sung by Sis.Abelasha Joshva
1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதுன்னை ஆசீர்வதிப்பார்
நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திட
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார் – இம்மட்டும்
2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதில்லை தம் ஆலோசனை
கோர பயங்கர காற்றடித்தும்
கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும் – நெஞ்சமே
3. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்திடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்த்திடும் ஐக்கியத்திலே
ஜெய கம்பீரமே உனக்குண்டே – நெஞ்சமே
4. விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலது பாரிசத்திலே
கர்த்தன் தாம் நிற்பதால் அசைந்திடான் – நெஞ்சமே
5. ஏழை உன் ஆத்துமா பாதாளத்தில்
என்றும் அழிந்திட விட்டு விடார்
தம் சமூகம் நித்திய பேரின்பமே
சம்பூரண ஆனந்தம் பொங்கிடுமே – நெஞ்சமே
6. அங்கே அநேக வாசஸ்தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே – நெஞ்சமே
இயேசுவை நம்பினோர் பாடல் வரிகள், Yesuvai Nambinor Lyrics
Yesuvai Nambinor song lyrics in English
1.Yesuvai Nambinor Maandathillai
Enenna Thunbangal Nearittalaum
Singaththin Vaayinintrum Ratchippaar
Pangam Vaarathunnai Aaseervathippaar
Nenjamae Nee Anjidathae
Nambinorai Kirubai Soolnthida
Immattum Kaathavar Immanuveal
Innamum Kaaththunnai Nadathuvaar – Immattum
2.Naasiyil Suwasamulla Maantharai
Nambuvathillai Tham Aalosanai
Kora Bayangara Kaattradithum
Kanmalai Mael Kattum Veedu Nirukkum – Nenjamae
3.Yesuvil Naamaththil Jeyam pettrae
Yeagi paranthidum Baktharodae
Searnthentrum Vaalththidum Aikkiyaththilae
Jeya Kembeeramae Unakkundae – Nenjamae
4.Viswasaththaal Neethimaan pilaippaan
Varatchi Miguntha Kaalathilum
Bakthan Valathu Paarisathilae
Karthan Thaam nirpathaal Asaithidaan – Nenjamae
5.Yealai Un Aathuma Paathalaththil
Entrum Alinthida Vittuvidaar
Tham samoogam Niththiya perinbamae
Samboorana Aanantham Pongidumae – Nenjamae
6.Angae Anega vaasaththalangal
Anbin Pitha Veettil Jolikkuthae
Nearthiyana idangalail Unthan
Niththiya pangu kidaithidumae – Nenjamae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics of the Tamil Christian song ‘இயேசுவை நம்பினோர் – Yesuvai Nambinor’.
- It consists of six verses emphasizing faith, comfort, and divine protection.
- The lyrics include themes of hope, perseverance, and the power of Jesus’ name.
- Translation of the song’s lyrics into English is also available for non-Tamil speakers.
- The article features links to other related Christian song lyrics.


