இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம் – Yesuvai paadi Yeatri

பல்லவி

இயேசுவையே பாடி ஏற்றிப் புகழ்வோம்

சரணங்கள்

1. பாவம் நிறைந்த பாரில் சாபந் தொலைக்க வந்த
தேவ குமாரனான திரியேக நாதனிவர் – இயேசுவையே

2. இன்னிலம் புரந்த புத்ரன் இயேசு எம் உத்திரன்
உன்னதர்கள் போற்றும் உயர்வான புவி மித்திரன் – இயேசுவையே

3. பாவமதா லிளைத்தோரைப் பண்பாய் இரட்சிக்குங் கர்த்தன்
தேவ தூதரும் போற்றும் தெய்வ லோகத்தின் சித்தம் – இயேசுவையே

4. நானிலம் புகழ்ந்திட மானிலம் மகிழ்ந்திட
வானிலத்தோர்கள் பாட வானாசனமே விட்ட – இயேசுவையே

5. ஆவலாய்த் தேடுவோர்க்கு ஆனந்தமளிப்பாரே
ஆவியைக் கொடுப்பாரே தாவியே மீட்பாரே – இயேசுவையே

Leave a Comment