Best collections of Bible Verses For Birthdays
பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Happy Birthday |
---|---|
“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் .” ஆதியாகமம் 12 : 2 | “And I will make of thee a great nation, and I will bless thee, and make thy name great; and thou shalt be a blessing:” Genesis 12 : 2 |
“கர்த்தர் உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப் பண்ணுவார்.” ஆதியாகமம் 17 : 2 | “And I will make my covenant between me and thee, and will multiply thee exceedingly.” Genesis 17 : 2 |
“கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.” எண்ணாகமம் 6 : 24 | “The LORD bless thee, and keep thee:” Numbers 6 : 24 |
“கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன் மேல் கிருபையாயிருக்கக்கடவர்.” எண்ணாகமம் 6 : 25 | “The LORD make his face shine upon thee, and be gracious unto thee:” Numbers 6 : 25 |
“கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.” எண்ணாகமம் 6 : 26 | “The LORD lift up his countenance upon thee, and give thee peace.” Numbers 6 : 26 |
“நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக.” உபாகமம் 1 : 11 | “The LORD God of your fathers make you a thousand times so many more as ye are, and bless you, as he hath promised you!” Deuteronomy 1 : 11 |
“சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப் பட்டிருப்பாய்;” உபாகமம் 7 : 14 | “Thou shalt be blessed above all people:” Deuteronomy 7 : 14 |
“உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.” உபாகமம் 15 : 5 | “Only if thou carefully hearken unto the voice of the LORD thy God, to observe to do all these commandments which I command thee this day.” Deuteronomy 15 : 5 |
“நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.” உபாகமம் 28 : 3 | “Blessed shalt thou be in the city, and blessed shalt thou be in the field.” Deuteronomy 28 : 3 |
“நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைபார்க்கிலும் புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன்.” உபாகமம் 26 : 19 | “And to make thee high above all nations which he hath made, in praise, and in name, and in honour;” Deuteronomy 26 : 19 |
“கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.” உபாகமம் 28 : 8 | “The LORD shall command the blessing upon thee in thy storehouses, and in all that thou settest thine hand unto; and he shall bless thee in the land which the LORD thy God giveth thee.” Deuteronomy 28 : 8 |
“கர்த்தர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.” சங்கீதம் 20 : 4 | “Grant thee according to thine own heart, and fulfil all thy counsel.” Psalms 20 : 4 |
“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.” சங்கீதம் 37 : 4 | “Delight thyself also in the LORD; and he shall give thee the desires of thine heart.” Psalms 37 : 4 |
“உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.” சங்கீதம் 91 : 11 | “For he shall give his angels charge over thee, to keep thee in all thy ways.” Psalms 91 : 11 |
“இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.” சங்கீதம் 118 : 24 | “This is the day which the LORD hath made; we will rejoice and be glad in it.” Psalms 118 : 24 |
“நான் இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” ஆகாய் 2 : 19 | “From this day will I bless you.” Haggai 2 : 19 |
“நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன்.” எபிரேயர் 6 : 14 | “Saying, Surely blessing I will bless thee, and multiplying I will multiply thee.” Hebrews 6 : 14 |
“உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.” 3 யோவான் 2 | “Beloved, I wish above all things that thou mayest prosper and be in health, even as thy soul prospereth.” 3 John 2 |