என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal yellam

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம்என் தேவன் நீரே ஆனீரேஎன் சொந்தம் எந்தன் பந்தம் எல்லாம்என்றனென்றும் நீரே ஆனீரே எனக்காக செந்நீரும் கண்ணீரும் சிந்திஎன்னை மீட்க மரணம் வென்றீரோ-2-என் சிந்தை 1.என் கோட்டையும் மதிலும் ஆனவர் நீரேஎன் கேடகமும் அரணும் ஆனவர் நீரேஎனக்காக சிலுவையை அன்பாய் சுமந்துஎன்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக 2.என் மீட்பும் உணர்வும் உயர்வும் நீரேஎன் சுகமும் ஜீவனும் பெலனும் நீரேஎனக்காக அடிமை கோலம் எடுத்துஎன்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக

இயேசு நம் வாழ்க்கையில்- Yesu Nam Vazhkaiyil

இயேசு நம் வாழ்க்கையில்இருந்தாலே போதும் இயேசு நம் வாழ்க்கையில்(2) 1.இயேசு என்னோடு இருப்பார்வெற்றி பெறுவேன்கஷ்டங்கள் கவலைகள் இல்லைஎன்றும் இல்லைஇயேசு என்னோடு இருப்பார்நான் பெலன் அடைவேன்அவரோடு என்றும் நானும்பாடி மகிழ்வேன்அவர் எனக்காய் எல்லாம் செய்தார்நான் தோற்றதே இல்லை (2) இயேசு நம் வாழ்க்கையில்இருந்தாலே போதும் இயேசு நம் வாழ்க்கையில் (2) 2.இயேசு என்னோடு இருப்பார்எல்லாம் முடியும்துன்பங்கள் துயரங்கள் இல்லைஎன்றும் இல்லைஇயேசு என்னோடு இருப்பார்குறைவே இல்லைஅவரையே நம்பி இருப்பேன்பாடி மகிழ்வேன்அவர் எனக்காய் எல்லாம் செய்தார்நான் தோற்றதே இல்லை (2) இயேசு … Read more இயேசு நம் வாழ்க்கையில்- Yesu Nam Vazhkaiyil

Paaduven Paravasamaaguven – பாடுவேன் பரவசமாகுவேன்

பாடுவேன் பரவசமாகுவேன்பறந்தோடும் இன்னலே 1. அலையலையாய் துன்பம் சூழ்ந்துநிலை கலங்கி ஆழ்த்துகையில்அலை கடல் தடுத்து நடுவழி விடுத்துகடத்தியே சென்ற கர்த்தனை 2. என்று மாறும் எந்தன் துயரம்என்றே மனமும் ஏங்குகையில்மாராவின் கசப்பை மதுரமாக்கிமகிழ்வித்த மகிபனையே 3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்உதவுவாரற்றுப் போகையில்கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்துதாகம் தீர்த்த தயவை 4. வனாந்திரமாய் வாழ்க்கை மாறிபட்டினி சஞ்சலம் நேர்கையில்வான மன்னாவால் ஞானமாய் போஷித்தகாணாத மன்னா இயேசுவே 5. எண்ணிறந்து எதிர்ப்பினூடேஏளனமும் சேர்ந்து தாக்கையில்துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டிஜெயகீதம் ஈந்தவரை

Nenje nee Kalangathae – நெஞ்சே நீ கலங்காதே

நெஞ்சே நீ கலங்காதே பல்லவி நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின்ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று. அனுபல்லவி வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் – நெஞ்சே சரணங்கள் 1. வினைமேல் வினை வந்தாலும்,-பெண்சாதி பிள்ளை,மித்ரு சத்ருவானாலும்,மனையொடு கொள்ளை போனாலும், வானம் இடிந்துவீழ்ந்தாலும். – நெஞ்சே 2. பட்டயம், பஞ்சம் வந்தாலும்,-அதிகமானபாடு நோவு மிகுந்தாலும்,மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம்கைவிட்டாலும் – நெஞ்சே 3. சின்னத்தனம் எண்ணினாலும்,-நீ நன்மை செய்யத்தீமை பிறர் பண்ணினாலும்,பின்னபேதகம் சொன்னாலும், பிசாசு வந்தணாப்பினாலும் … Read more Nenje nee Kalangathae – நெஞ்சே நீ கலங்காதே

Yengae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதங்க முழுவதும் நோக ஐயா , என் யேசுநாதா — எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலமில்லாமல்தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் — எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர — எங்கே 4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடரமாயம் … Read more Yengae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார் சரணங்கள்1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு 2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்கருத்துடன் உன்னைக் காத்திடவே — இயேசு 3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்தாமதமின்றி நீ வந்திடுவாய் — இயேசு 4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியேகிருபையாய் … Read more Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார்

Aananthamae Paramaananthamae – ஆனந்தமே பரமானந்தமே

ஆனந்தமே பரமானந்தமே – இயேசுஅண்ணலை அண்டினோர்க் கானந்தமே சரணங்கள்1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய் கிடைத்திடினும் — ஆனந்தமே 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையேகாரணமின்றி கலங்கேனே நான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே — ஆனந்தமே 3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் — ஆனந்தமே … Read more Aananthamae Paramaananthamae – ஆனந்தமே பரமானந்தமே

kaalamo selluthae – காலமோ செல்லுதே Dr.D.G.S.Dhinakaran’s Most Inspirational Song lyrics

காலமோ செல்லுதேவாலிபமும் மறையுதேஎண்ணமெல்லாம் வீணாகும்கல்வியெல்லாம் மண்ணாகும்மகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் துன்பமெல்லாம் மறைந்துபோம்இன்னலெல்லாம் மாறிப்போம்வியாதி எல்லாம் நீங்கி போம்நாயகன் நம் இயேசுவால்மகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் கருணையின் அழைப்பினால்மரணநேரம் வருகையில்சுற்றத்தார் சூழ்ந்திடபற்றுள்ளோர் கதறிடமகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் வாழ்க்கையை இயேசுவால்நாட்களை பூரிப்பாய்ஓட்டத்தை முடிக்ககாத்துகொள் விசுவாசத்தைமகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்

Parisuththar Koottam Yesuvai Pottri – பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி song lyrics

பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட பரமானந்த கீதமங்கெழும்ப நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய அண்டினோரெவரும் அவரைச் சேர அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே பேதுரு பவுலும் யோவானு மங்கே பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும் இரத்தச் சாட்சிகளும் திரளாய்க் கூட நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே ஜெகத்தில் சிலுவை சுமந்தோ ரெல்லாம் திருமுடி யணிந்திலங்கிடவும் தேவசேயர்களா யெல்லாரும் மாற … Read more Parisuththar Koottam Yesuvai Pottri – பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி song lyrics

Unnaiyandri vera gethi – உன்னையன்றி வேறே கெதி song lyrics

உன்னையன்றி வேறே கெதி ஒருவரில்லையே ஸ்வாமி!தன்னையே பலியாய் ஈந்த மன்னுயிர் ரட்சகனே!அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ?அதிசய மனுவேலா -ஆசை என் யேசு ஸ்வாமி! 1. அஞ்சியஞ்சித் தூரநின்றென் சஞ்சலங்களை நான் சொல்லி,அலைகடல் துரும்புபோல் மலைவு கொண்டேனானையோ!கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த வஞ்சகன் முகம் பாராய்க்கிட்டி என்னிடம் சேர்ந்து கிருபை வை யேசு ஸ்வாமி! 2. எத்தனை கற்றாலும் தேவ பக்தியேது மற்ற பாவி,எவ்வளவு புத்தி கேட்டும் அவ்வளவுக் கதி தோஷிபித்தனைப்போல பிதற்றிக் கத்தியே புலம்பு மேழைப்பேதையைக் … Read more Unnaiyandri vera gethi – உன்னையன்றி வேறே கெதி song lyrics

Neer Illatha Naalellam – நீ இல்லாத நாளெல்லாம் song lyrics

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்உண்மையின் வழியே நீ ஆவாய்உறவின் பிறப்பே நீ ஆவாய்உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய்எனது வலிமையும் நீ ஆவாய்எனது அரணும் நீ ஆவாய்எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய்எனது மொழியும் நீ ஆவாய்எனது மீட்பும் நீ ஆவாய்எனது உயிர்ப்பும் நீ ஆவாய்.

error: Alert: Login & see the lyrics !!