கார்மேகம் சூழுதையா – Karmegam Soozhum

Faith Score+1
Faith Score+1

கார்மேகம் சூழுதையா – Karmegam Soozhum

கார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டு

வான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையா

பூலோக தாய் மடியும் நீ தவழ ஏங்குதையா

ஏ…. பெத்தலையில் பெறந்தாரே யேசு
இனி அதக்கூறி தெனந்தென்றல் வீசும்
ஏ…. ஏழ பாழை வெச்சிருக்கும் பாசம்
வாழ்நாளில் மாறதுஉன் நேசம்

(வான்லோக தேவதையும்)

புள்ளி மானும் அழகில்ல உன்னோட முன்னால
யார கண்டும் பயமில்ல நீ கூட இருந்தால
நீ பொறந்த நாள எண்ணி சூரியனும் காத்திருக்க
சந்திரனும் சூரியனும் ஒண்ணுக்கொண்ணு போட்டி போட

பஞ்ச பூதம் எல்லாம் உன் தயவில் வாழவே
பாவி மனுச பாவம் உன்மேல சேருதே
பாவி நானும் யேசு உன்கூட இருக்கவே
பஞ்ச பூதம் எல்லாம் பின்னால போகுதே

ஏ…. கிறிஸ்துமஸ் நாள எண்ணி தானே
ஒன்னோட புள்ளையானேனே….

(வான்லோக தேவதையும்)

பட்ட மரம் பூக்குதையா நீ போகும் இடமெல்லாம்
கெட்ட எண்ணம் தோக்குதையா இறையன்பின் வழியெல்லாம்
நீ சொன்ன வார்த்தையெல்லாம் நெஞ்சுக்குள்ள இனிச்சிருக்க
நெறைவாகிப் போனதே நீ பூவுலகில் செனிச்சிருக்க

சின்ன பாலகனே பூலோக நாயகா
பாவம் போக்க வந்த வான்லோக மன்னவா
நோயி நொடியெல்லாம் தீக்க வந்த சாமியே
ஒன்ன போற்றுகிறோம் ஏலேலோ பாடியே

ஏ…. காயம் பட்ட கண்ணியமே வாரும்
பாவப்பட்ட எங்களயே பாரும்

(வான்லோக தேவதையும்)

ஏ…. கிறிஸ்துமஸ் நாள எண்ணி தானே
ஒன்னோட புள்ளையானேனே
ஏ…. காயம் பட்ட கண்ணியமே வாரும்
பாவப்பட்ட எங்களயே பாரும்

Karmegam Soozhuthaiya song lyrics in english

Karmegam Soozhuthaiya

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo