✝️✝️ ஒரு நிமிடம் தியானம் ✝️✝️
வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்.
சங்கீதம் 65:11
முடிசூட்டுதல் என்பது முடியாட்சியில் அரசராக பதவி ஏற்பவரின் தலையில் கிரீடம் வைப்பது ஆகும். இந்தச் சொல் பொதுவாக தலையில் கிரீடம் அணிவிக்கப்படுவதைக் குறிக்கிறது, அதன்பிறகு அரசர் அரசாளுவார், அது போல கர்த்தர் நமக்கு இந்த புதிய வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிறார் நன்மை நம்மை ஆளும்படி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் நம்முடன் இருப்பார்,
அதுப்போல கிறிஸ்தவர்களாகிய நாம் குடும்பத்திலும் சமுதாயத்திலும் வறுமையில் வாடுவோருக்கும் ஏழை எளியர்வர்கள் திக்கற்ற பிள்ளைகளுக்கும் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். ஏனென்றால் வேதம் கூறுகிறது நன்மை செய்யவும் தானதர்மம் செய்யவும் மறவாதிருங்கள்;இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார், நம்மால் இயன்ற நன்மைகளை பிறருக்கு செய்வோம். தேவன் நம் ஒவ்வொருவரையும் இரட்டிப்பான நன்மையினால் நிறைத்து ஆசீர்வதிப்பாராக, அல்லேலூயா, ஆமென்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கர்த்தருடைய ஊழியத்தில் W. மேஷாக்.
Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.
