Worship – ஆராதனை







John-4:22-24
Where we worship is not important, Whom we worship and How we worship is important.
          1. Know what you worship
          2. Know how you worship
A. We worship the Father (God)
                                   We are worshiping a God who is alive. The people in the nation are worshiping gods which are clay, wood, stone and metal. What a privilege we have.

B. We worship in spirit ஆவியோடு ஆராதித்தல்
                                    The Spirit always draws attention to Jesus, glorify Jesus not to himself. When we worship with our voice, actions, talents, music and songs we should not be drawing others attention towards us. Our spirit with the Holy Spirit must glorify Jesus. We should not seek glory or praise to us.

When evil spirit manifests in people, it draws the attention of other people towards that person. But when the Holy Spirit manifests, He draws the attention of the people towards glorifying Jesus, not the person.

  • ஆவியில் மறுபடிபிறந்தவர்களாக (இரட்சிக்கப்பட்டவர்களாக) யோவா-3: 3 இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
  • பரிசுத்தஆவியானவரை உடையவர்களாக: ரோம-8: 9 தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.

          Rom-8:9 if you are a child of God, you have the Spirit of God in you (John-20:22 ‘them’ means 20:19 ‘the disciples’ ).

  • பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டவர்களாக தேவனை ஆராதித்தல்

          But the Baptism of the Spirit is different thing (It started to happen first, on the Day of Pentecost after Resurrection of Jesus).

பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட முதல் சம்பவம்:
                                     Acts-2:1  பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.

They had come together there. Why?

Acts-1:4-5 அன்றியும், அவர் அவர்களுடனே கூடி வந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான், நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

Jesus had told them to wait for the Baptism of the Holy Spirit. This was foretold by John the Baptist already.

மத்-3: 11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

‘அக்கினி ஞானஸ்நானம்’ என்பது கர்த்தருடைய இரண்டாம் வருகையின்போது நடைபெறவிருக்கிறது.

So they were obeying Jesus. They were waiting for the Baptism of the Holy Spirit. There were around 120 people. Many people were there with one accord (with one mind and spirit) For the Spirit to come to fill, unity or oneness is required. It happens when we wait in obedience to Jesus, in unity.

ஆவியானவரின் நிரப்பப்படுதலில் (ஆவியின் ஞானஸ்நானத்தில்) நடப்பது:

  1. காத்திருத்தல் (அப்-2: 1)
  2. ஆராதித்தல் (ஒருமனப்பட்டு தேவனை ஆராதித்தல் செய்தல்)
  3. வார்த்தை பெறுதல் (ஆவியானவர் எல்லாரையும் நிரப்புதல்)
  4. சான்று பகருதல் (அங்கே வந்தவர்களுக்கு பேதுரு எழுந்து நின்று இயேசுவைக்குறித்து சான்று பகர்தல்).

ஆவியானவரைப் பெறுதல் என்பதும், ஆவியானவரால் நிரப்பப்படுதல் என்பதும் வெவவ்ேறு அனுபவங்களாக இருக்கின்றன. ‘பெறுதல்’ என்பது ஒருமுறை நடக்கும் உள்-அனுபவமாகும். ‘நிரப்பப்படுதல்’ என்பதோ அனுதினமும் நடைபெறவெண்டிய தொடர்-அனுபவமாகும்.

Receiving the Spirit during Salvation is like getting the water in us (but not full, still the thirst there) But Baptism of the Spirit is like being filled with the water to quench the thirst, to help us to continue the journey of life, live the righteous life.

ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தலுக்கும், ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை ஒப்பிட்டுப்பாருங்கள்.

இயேசுவின் வாழ்வில் முதல் அனுபவம்:
                                         மத்-3: 16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது, தேவஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

ஆவியானவர் புறவாக வந்தாரா, புறாவைப்போல வந்தாரா? ஆவியானவர் புறா அல்ல, இது புறாவின் தன்மையை அடையாளப்படுத்தும் உருவகமாக இருக்கிறது.

இதற்குமுன் ஆவியானவர் இயேசுவுக்குள் இருந்தாரா? ஆம். அவர் கருவாக உற்பத்தியானதே பரிசுத்த ஆவியானவரால்தானே!

லூக்-4: 1 இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்,

யோவா-20: 21-22 இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக, பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, அவர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

அப்-2: 4 அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வௌ;வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

அப்-4: 8 அப்பொழுது பேதுரு பரிசுத்தஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே!

அப்-2: 4ல் அவர்களெல்லாரும் என்பதில் பேதுருவும் இருந்தாரா, பேதுருவும் நிரப்பப்பட்டாரா? அப்-4: 8ல் ‘நிறைந்து’ என்ற வார்த்தை மறுபடியும் வருவதைக் கவனியுங்கள்.

ஊழியப் பொறுப்பிற்கு நியமிக்கப்பட எதிர்பார்க்கப்பட்ட தகுதி:
                                   அப்-6: 3 ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்து கொள்ளுங்கள், அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.

ஸ்தேவான்:
அப்-6: 5 இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டார்கள்.

அப்-7: 55 அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டான்.

யோவா-4: 24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

C. Worship in truth: தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் உண்மையோடு தொழுதுகொள்ளவேண்டும்.

  • உண்மையாக, நிஜமாக ஆராதித்தல் (சொல்வதும் செய்வதும் ஒன்றாக இருக்கவேண்டும்)
  • உண்மையின்படி (சத்தியம் சொல்கிறபடி) ஆராதித்தல்
  • உண்மையான தேவனின் அருகிலிருக்கும் நிச்சயத்தோடு, அருடைய பிரசன்னத்தை அனுபவித்து ஆராதித்தல்

Worship Him really. What you say must be done in action also. When you sing or say ‘I lift my hands‘ we need to lift the hands in action also. When we say I kneel before, this is not for song sake, we need to do it in action. When you sing or say, mean it and do it. If you say ‘whole heartedly‘, do it whole heartedly.

Worship should not be a mere program, where we sing some songs and then end. Worship is that we
enter into His presence.
Heb-10:19-23 talks about Being the in the presence of God to love Him by worship and prayer.

எபி-10:19-23 ஆகையால், சகோதரரே, நாம் (ஆராதனை மற்றும் ஜெபத்தின் மூலம்) பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும், ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,

                              பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்தல்:


யாத்-25: 8 அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக. (இது மகாபரிசுத்த ஸ்தலம் என்றும் அழைக்கப்படுகிறது. யாத்-26: 33, 34)

பரிசுத்த ஸ்தலத்திலே உள்ளவைகள்:

     1. யாத்-25: 10 சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்.
     2. யாத்-25: 17 பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக, அது இரண்டரை முழு நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது. யாத்-26: 34 மகாபரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப்பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக. (கிருபையின் சிங்காசனம்)
     3.யாத்-25: 18 பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக, பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக.
         இரண்டு வகை தேவதூதர்களின் அடையாளம்:

            1. பணிவிடை செய்யும் தூதர்கள் (எபி-1: 14),
            2. யுத்தம் செய்யும் தேவதூதர்கள்

    4. யாத்-25: 16 நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப் பிரமாணத்தை அந்தப் பெட்டியிலே வைப்பாயாக. (வேத வசனங்கின் முக்கியத்துவம்)
யாத்-25: 21 கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக. (கிருயையும் சத்தியமும் இணைந்து நம்மை நடத்துதல்).

  • 20. அந்த மார்க்கத்தின் வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
  • 21. தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகாஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,

யாத்-28: 29 ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது. (பிரதான ஆசாரியன் மாத்திரம்)
யாத்-28: 1 உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு

எபி-10: 22 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும், விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம் (பிரவேசிப்போமாக).

               பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கான காரணங்கள்:

A. யாத்-28: 35 ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும், வெளிலே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக்கொள்ளவேண்டும்.
B. லேவி-16: 34 இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது,
1. ஆராதனை செய்திட
2. பாவநிவிர்த்தி செய்திட

எபி-4: 15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே
நமக்கிருக்கிறார். 16. ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் (பிரவேசிப்போமாக).

லேவி-16: 2 கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன், ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.

லேவி-16: 34 இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்ற சொல் என்றார்.

The veil that was in the temple of God in heaven has been torn by Jesus death on the cross for our sins, to allow all of us enter His Throne Room boldly. Now He is our High Priest who stands before God on our behalf. So He is calling us to come into His presence with boldness. Worship the Holy God with a true heart. Enter the Holiest place, draw near, with full assurance of Faith, which means, ‘knowing that Jesus Christ is with me to cover me from my sins, so that the Holy God doesn’t burn me’. Confessing any faults or sins done before God is bodies washed with pure water (Word).

23. அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம், வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.

Then verses 10:24-25 shifts the focus to our neighbors. Stir one another in love and good works.

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo