Psalms-103/சங்கீதம்-103
சங்கீதம்-103 | Psalms-103 |
---|---|
1.என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. | 1.A Psalm of David. Bless the LORD, O my soul: and all that is within me, bless his holy name. |
2.என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. | 2.Bless the LORD, O my soul, and forget not all his benefits: |
3.அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, | 3.Who forgiveth all thine iniquities; who healeth all thy diseases; |
4.உன் பிராணனை அழிவுக்கு விலக்கிமீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, | 4.Who redeemeth thy life from destruction; who crowneth thee with lovingkindness and tender mercies; |
5.நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது. | 5.Who satisfieth thy mouth with good things; so that thy youth is renewed like the eagle’s. |
6.ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். | 6.The LORD executeth righteousness and judgment for all that are oppressed. |
7.அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார். | 7.He made known his ways unto Moses, his acts unto the children of Israel. |
8.கர்த்தர் உருக்கமும், இரக்கமும் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். | 8.The LORD is merciful and gracious, slow to anger, and plenteous in mercy. |
9.அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். | 9.He will not always chide: neither will he keep his anger for ever. |
10.அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். | 10.He hath not dealt with us after our sins; nor rewarded us according to our iniquities. |
11.பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. | 11.For as the heaven is high above the earth, so great is his mercy toward them that fear him. |
12.மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். | 12.As far as the east is from the west, so far hath he removed our transgressions from us. |
13.தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். | 13.Like as a father pitieth his children, so the LORD pitieth them that fear him. |
14.நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். | 14.For he knoweth our frame; he remembereth that we are dust. |
15.மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். | 15.As for man, his days are as grass: as a flower of the field, so he flourisheth. |
16.காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று, அது இருந்த இடமும் இனி அதை அறியாது. | 16.For the wind passeth over it, and it is gone; and the place thereof shall know it no more. |
17.கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது. | 17.But the mercy of the LORD is from everlasting to everlasting upon them that fear him, and his righteousness unto children’s children; |
18.அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது. | 18.To such as keep his covenant, and to those that remember his commandments to do them. |
19.கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது. | 19.The LORD hath prepared his throne in the heavens; and his kingdom ruleth over all. |
20.கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள். | 20.Bless the LORD, ye his angels, that excel in strength, that do his commandments, hearkening unto the voice of his word. |
21.கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள். | 21.Bless ye the LORD, all ye his hosts; ye ministers of his, that do his pleasure. |
22.கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி. | 22.Bless the LORD, all his works in all places of his dominion: bless the LORD, O my soul. |
We will be happy to hear your thoughts