சங்கீதம்-91 – Psalms-91
சங்கீதம்-91 | Psalms-91 |
---|---|
1.உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். | 1.He that dwelleth in the secret place of the most High shall abide under the shadow of the Almighty. |
2.நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். | 2.I will say of the LORD, He is my refuge and my fortress: my God; in him will I trust. |
3.அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். | 3.Surely he shall deliver thee from the snare of the fowler, and from the noisome pestilence. |
4.அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். | 4.He shall cover thee with his feathers, and under his wings shalt thou trust: his truth shall be thy shield and buckler. |
5.இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், | 5.Thou shalt not be afraid for the terror by night; nor for the arrow that flieth by day; |
6.இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். | 6.Nor for the pestilence that walketh in darkness; nor for the destruction that wasteth at noonday. |
7.உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. | 7.A thousand shall fall at thy side, and ten thousand at thy right hand; but it shall not come nigh thee. |
8.உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய். | 8.Only with thine eyes shalt thou behold and see the reward of the wicked. |
9.எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். | 9.Because thou hast made the LORD, which is my refuge, even the most High, thy habitation; |
10.ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. | 10.There shall no evil befall thee, neither shall any plague come nigh thy dwelling. |
11.உன் வழிகளிலெல்லாம் உன்னைக்காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். | 11.For he shall give his angels charge over thee, to keep thee in all thy ways. |
12.உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள். | 12.They shall bear thee up in their hands, lest thou dash thy foot against a stone. |
13.சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய். | 13.Thou shalt tread upon the lion and adder: the young lion and the dragon shalt thou trample under feet. |
14.அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். | 14.Because he hath set his love upon me, therefore will I deliver him: I will set him on high, because he hath known my name. |
15.அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். | 15.He shall call upon me, and I will answer him: I will be with him in trouble; I will deliver him, and honour him. |
16.நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன். | 16.With long life will I satisfy him, and show him my salvation. |