Tamil Christmas Bible Verses

ஏசாயா : Isaiah : 7 அதிகாரம்​

    1. 14. ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

 

    Therefore the Lord himself shall give you a sign; Behold, a virgin shall conceive, and bear a son, and shall call his name Immanuel.

 

லூக்கா : Luke : 2 அதிகாரம்​

1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
And it came to pass in those days, that there went out a decree from Caesar Augustus, that all the world should be taxed.

2. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.
(And this taxing was first made when Cyrenius was governor of Syria.)

3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.
And all went to be taxed, every one into his own city.

4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
And Joseph also went up from Galilee, out of the city of Nazareth, into Judaea, unto the city of David, which is called Bethlehem; (because he was of the house and lineage of David:)

5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.
To be taxed with Mary his espoused wife, being great with child.

6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
And so it was, that, while they were there, the days were accomplished that she should be delivered.

7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.
And she brought forth her firstborn son, and wrapped him in swaddling clothes, and laid him in a manger; because there was no room for them in the inn.

8. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
And there were in the same country shepherds abiding in the field, keeping watch over their flock by night.

9. அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
And, lo, the angel of the Lord came upon them, and the glory of the Lord shone round about them: and they were sore afraid.

10. தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
And the angel said unto them, Fear not: for, behold, I bring you good tidings of great joy, which shall be to all people.

11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
For unto you is born this day in the city of David a Saviour, which is Christ the Lord.

12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
And this shall be a sign unto you; Ye shall find the babe wrapped in swaddling clothes, lying in a manger.

13. அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
And suddenly there was with the angel a multitude of the heavenly host praising God, and saying,

14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.
Glory to God in the highest, and on earth peace, good will toward men.

ஏசாயா :Isaiah : 2 அதிகாரம்​

6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

✝️✝️ ஒரு நிமிடம் தியானம் ✝️✝️

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9:6

1️⃣ அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்; என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.
நியாயாதிபதிகள் 13:18

2️⃣ இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது, அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.
ஏசாயா 28:29

3️⃣ உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். அவர் வல்லமையுள்ளவர் . அவர் இரட்சிப்பார். அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார். அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.
செப்பனியா 3:17

4️⃣ நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுள்ள ராஐனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
1 தீமோத்தேயு 1:17

5️⃣ அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.
எபேசியர் 2:17

நமக்காக பிறந்த பாலகனின் நாமங்கள் மகத்துவமானவை, நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவை பற்றிக்கொண்டு நடப்போமேயானால் கர்த்தராகிய ஆண்டவருடைய நாமங்கள் நம்மை விசேஷமாக நடப்பிக்கும், அல்லேலூயா, ஆமென்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல்வாழ்த்துக்கள்

Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

Tamil Christians Songs Lyrics

Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

Follow Us!

christian medias ios app
WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
Logo