பேரன்பர் இயேசு நிற்கிறார் – Pearanbar Yesu Nirkiraar Tamil Christian Old Traditional church songs lyrics, கிறிஸ்தவ பாடல்கள், ஞானப்பாட்டுகள், கீதங்களும் கீர்த்தனைகளும்
பேரன்பர் இயேசு நிற்கிறார்
மகா வைத்தியனாக
கடாட்சமாகப் பார்க்கிறார்
நல் நாமம் போற்றுவோமே
பல்லவி
1.விண்ணில் மேன்மை பெற்றதே
மண்ணோர்க் கின்பமாகவே
பாடிப்போற்றும் நாமமே
இயேசு என்னும் நாமம்
2.உன் பாவம் யாவும் மன்னிப்பேன்
அஞ்சாதே என்கிறாரே;
சந்தேகங் கொண்டு சோர்வதேன்?
மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில்
3.உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே
மேன்மை உண்டாவதாக!
நேசிக்கிறேன் இயேசு நாமம்
நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில்
4.குற்றம் பயம் நீக்கும் நாமம்
வேறில்லை இயேசுவே தான்!
என் ஆத்மா பூரிப்படையும்
அந்நாமம் கேட்கும்போது – விண்ணில்
1.பேரன்பர் யேசு நிற்கிறார்.
நாம் சேர்ந்துக் கொள்ளுவோமே;
கடாட்சமாகப் பார்க்கிறார்.
நல் நாமம் போற்றுவோமே.
விண்ணில் மேன்மையானது,
மண்ணோர்க்கின்பமானது,
பாடிப் போற்றும் நாமமே,
யேசு என்னும் நாமம்.
2.ரட்சண்ய வல்ல நாமத்தால்
நம் துக்கம் நீங்கிப் போகும்,
அவ்வின்ப நாமம் கேட்பதால்
சந்தோஷமும் உண்டாகும்.
3.நல் மீட்பர் யாவர் பேரிலும்
கடாட்சம் வைக்கிறாரே;
தம் அண்டை சிறியோரையும்
தள்ளாமல் சேர்க்கிறாரே.
4.ஆனந்தமாகப் பாடுவோம்.
பேராவலோடு வாரும்;
ஒன்றாக ஆரவாரிப்போம்,
மெய் பக்தர் தாசர் யாரும்.
5.பேரின்ப மோட்ச லோகத்தில்
மாண்பாகக் கூடுவோமே.
ரட்சண்ய நாதர் பாதத்தில்
அடி பணிந்திடுவோம்.
- பேரன்பர் யேசு நிற்கிறார்
நாம் அண்டிக்கொள்வோமே
கடாட்சமாகப் பார்க்கிறார்
நல் நாமம் போற்றுவோமே
விண்ணில் மேன்மை பெற்றது
மண்ணோக்கின்பமாவதது;
பாடிப்போற்றும் நாமமது;
யேசு என்னும் ஆ! நாமம்.
2.ரட்சண்ய வல்ல நாமத்தால்
விசாரம் நீங்கிப் போகும்,
அவ்வின்ப நாமம் கேட்பதால்
சந்தோஷமும் உண்டாகும்.
3.நல் மீட்பர் யாவர் பேரிலும்
கடாட்சம் வைக்கிறாரே,
தம்மண்டை சிறியோரையும்
தள்ளாமல் சேர்க்கிறாரே.
4.ஆனந்தமாகப் பாடுவோம்
பேராவலோடு வாரும்
ஏகோபித்தார வாரிப்போம்,
மெய்ப்பக்தர் தாசர் யாரும்.
- பேரின்ப மோட்ச லோகத்தில்
மாண்பாகக் கூடுவோமே,
ரட்சண்ய நாதர் பாதத்தில்
சாஷ்டாங்கம் பண்ணுவோமே.
பேரன்பர் இயேசு நிற்கிறார் song lyrics, Pearanbar Yesu Nirkiraar song lyrics, Tamil songs
Pearanbar Yesu Nirkiraar song lyrics in english
Pearanbar Yesu Nirkiraar
Maha Vaithiyanaaga
Kadatchamaaga paarkiraar
Nal Naamam pottruvom
Vinnil Meanmai Pettrathae
Mannorkku Inbamaagavae
Paadi pottrum Naamamae
Yesu Ennum Naamam
Un paavam yaavaiyum Mannippean
Anjaathae Enkiraarare
Santhaekam kondu saervathaen
Mei bakkiyam Eegiraarae
Uyirtha Aattu kuttikae
Meanmai Undavathaaga
Neasikkirean Yesu Naamam
Nambiduvean Entrentrum
Kuttram Bayam Neekkum Naamam
Vearillai Yesuvae Thaan
En Aathuma Poorippadaiyum
Annaamam Keatkkum Pothu
பின்னும் தேவன் நோவாவையும் அவன் குமாரரையும் நோக்கி:
நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,
உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.
ஆதியாகமம் | Genesis: 9:8,9,10
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

