எல்லாம் இயேசுவே
எனக்கெல்லாம் இயேசுவே
தொல்லை மிகு இவ்வுலகில்
துணை இயேசுவே
1. ஆயனும் சகாயனும்
நேயனுமுபாயனும்
நாயனும் எனக்கன்பான
ஞானமணவாளனும்
2. தந்தை தாயினம் ஜனம்
பந்துள்ளோர் சிநேகிதர்
சந்தோட சகலயோக
சம்பூரண பாக்யமும்
3. கவலையிலாறுதலும்
கங்குலிலென் ஜோதியும்
கஷ்ட நோய்ப் படுக்கையிலே
கை கண்ட ஒளஷதமும்
4. போதகப் பிதாவுமென்
போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங்
கூட்டாளியுமென் தோழனும்
5. அணியு மாபரணமும்
ஆஸ்தியும் சம்பாத்தியமும்
பிணையாளியும் மீட்பருமென்
பிரிய மத்தியஸ்தனும்
6. ஆன ஜீவ அப்பமும்
ஆவலுமென் காவலும்
ஞான கீதமும் சதுரும்
நாட்டமும் கொண்டாட்டமும்
தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
And the LORD God planted a garden eastward in Eden; and there he put the man whom he had formed.
ஆதியாகமம் | Genesis: 2: 8
- தேவா இவ்வீட்டில் இப்போ – Devaa Evveettil Ippo
- எங்கும் நிறை தூயனே – Engum Nirai Thooyanae
- அங்கே போலே ஆருண்டு – Ange Pole Aarundu
- என்ன பத்தி இல்லையே – Enna Pathi Illaiyae
- என் இயலாமையில் நீர் – En iyalaamaiyil neer