Immatumaai Ennai kaathavarae – இம்மட்டுமாய் என்னை காத்தவரே
Immatumaai Ennai kaathavarae – இம்மட்டுமாய் என்னை காத்தவரே
இம்மட்டுமாய் என்னை காத்தவரே
கோடி நன்றி உமக்கு சொல்வேன்
கண்ணுறங்காமல் சுமந்தவரே
கருத்தாய் உமக்கு நன்றி சொல்வேன்
நான் மறந்தாலும் உம்மை மறுத்தாலும்
விலகினாலும் தூரம் போனாலும்
உம் கிருபை என்னை சூழ்ந்ததே
உம் கரமோ என்னை நடத்தியதே
பசியை நானோ அறிய வில்லை
திருப்தியாக போஷித்தீரே
வாதையோ என்னை அணுகவில்லை
சுகமாய் தினமும் நடத்தினீரே – நான் மறந்தாலும்
நெருக்கம் என்னை சூழ்ந்தபோது
நெருங்கி அன்பாய் தேற்றினீரே
பெலன் இல்லாத நேரங்களில்
பெலனாய் என்னோடு இருப்பவரே – நான் மறந்தாலும்
Immatumaai | Rezerpaul | Samuel | Latest Worship Song | Official Lyrical Video | HD
நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்ச வரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.
யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன.
ஆதியாகமம் | Genesis: 10:1,2,3,4,5
- Yesu Nee Krupayega – దేవా నీ కృప పొందుటకు
- ధరణి మురిసెను ఈ శుభ వార్తతో – Dharani Murisenu Ee Shubavartha Tho
- எல்லா கனத்திற்க்கும் புகழுக்கும் – Ella Ganathirkkum Pugalukkum
- నీతి సూర్యుడే ఉదయించెను – NETYAJEVAMI DEHA RUPAMI
- రాజాధిరాజు ఉదయించెనే – rajadhi Raji Udainchene