கள்ள கிறிஸ்துக்கள் யார்-Who are the false Christians

🔎 இவர்களின் துவக்கம் யார்? எங்கே? தோற்றம் எங்கே? Where does it start or originate?
🚷 பிசாசானவன்!

📓 யோவா 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
(சத்தியம் என்கிற தன்னை நிராகரித்தவர்களை பார்த்து இயேசுவானவர் சொன்ன வார்த்தை)

🤔 கள்ளக்கிறிஸ்துக்கள் என்கிற வார்த்தை, இந்நாட்களில் அதிகம் பேசப்படாத வார்த்தையாயிருந்தாலும், கிறிஸ்தவர்கள் கள்ளக்கிறிஸ்துக்களுக்கு எச்சரிப்பாக இருக்கவேண்டும்!

🤝 Instead of attacking an individual and a church, be aware that we have a common enemy Satan!

🗝️ கள்ளக்கிறிஸ்துக்கள் யார்? மெய்கிறிஸ்துவல்லாத ஒன்று என்று அர்த்தம்!

🚷 கள்ளக்கிறிஸ்துக்களால் அநேகர் வஞ்சிக்கப்படுவார்கள்!

📓 மத் 24:24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

🚷 அவரை விசுவாசிக்க, அடையாளங்களை தேடினவர்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கடுமையாக கடிந்துக்கொண்டார்! ஆண்டவரை அறிய வசன ஆதாரங்களை தேடாமல், அடையாளங்களை தேடுகிறவன் இடறுவது நிச்சயம்!
📓 மத்தேயு 12:38-39 அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.

🚷 கிறிஸ்துவல்லாததை கிறிஸ்து என்று போதிக்கிறவர்கள், கள்ளக்கிறிஸ்துக்களை அறிமுகப்படுத்தி அவனுக்கு (அவைகளுக்கு) ஊழியம் செய்கிறவர்கள்!

🗝️ கீழேயுள்ள வசனங்களில்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து போதிக்கவில்லையென்றால் கள்ளகிறிஸ்து அந்த போதகத்தில் உண்டு என்று அர்த்தம்!

📓 லூக் 2:11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

📓 மத் 1:23 அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.

📓 யோவா 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.

📓 ரோம 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்.

🤔 இவைகளின் காரணம் என்ன? ஆண்டவர் ஏன் இவைகளை அனுமதிக்கிறார்?

📓 II தெச 2:9-12 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், 10. கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். 11. ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications