![](https://www.worldtamilchristians.com/wp-content/uploads/2024/06/christian-songs-lyrics.png)
ஆண்டவர் இல்லத்தில் நுழைவோம் – Andavar Illathil Nulaivom
ஆண்டவர் இல்லத்தில் நுழைவோம் – Andavar Illathil Nulaivom
ஆண்டவர் இல்லத்தில் நுழைவோம் இன்று
அவர் தரும் புனிதத்தை பெறுவோம் (2)
அவரது சந்நிதி அமர்ந்திடுவோம்-2
அமைதியில் வாழ்வினை உணர்ந்திடுவோம்
1. பொன்னான நாளிதுவே நம்மை பண்பாக்கும் நாளிதுவே -2
மீட்பராய் நம்மை இங்கு கூட்டி வந்தார்
மானிட வாழ்வினை தேடித் தந்தார் (2)
இதை உணர்ந்திடவே இறை பணிந்திடவே
மனம் மகிழ்ந்திடவே நம்மை அழைத்தாரே
2. இறைவனின் நாளிதுவே நம்மை ஈடேற்றும் நாளிதுவே -2
சுமைகளை அவரிடம் தந்திடுவோம் சுகங்களை அவரிடம் கேட்டிடுவோம்
இதை அடைந்திடவே இறைசமூகத்திலே
உளம் மகிழ்ந்திடவே நம்மை அழைத்தாரே
Tamil Mass RC christian song with lyrics ஆண்டவர் இல்லத்தில் நுழைவோம் Andavar Illathil வருகைப்பாடல்