எக்காள சத்தம் வானில் தொனித்திடவே – Ekkala Satham Vaanil Thonothidave Lyrics
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
எம் இயேசு மா இராஜனே வந்திடுவார் – 2
அந்த நாள் மிக சமீபமே
சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே – 2
தேவ எக்காளம் வானில் முழங்க
தேவாதி தேவனைச் சந்திப்போமே – 2 – (எக்காள சத்தம் வானில்)
வானமும் பூமியும் மாறிடினும்
வல்லவர் வாக்கு தான் மாறிடாதே – 2
தேவதூதர் பாடல் தொனிக்கத்
தேவன் அவரையே தரிசிப்போமே – 2 – (எக்காள சத்தம் வானில்)
கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம் – 2
கண்ணீர் கவலை அங்கே இல்லை
கர்த்தர் தாமே வெளிச்சம் ஆவார் – 2 – (எக்காள சத்தம் வானில்)
கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
கர்த்தரின் சித்தமே செய்திடுவோம் – 2
பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – 2 – (எக்காள சத்தம் வானில்)
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
- Nambugireer Lyrics – நம்புகிறீர்
https://www.instagram.com/p/CK_6aXTnZog
கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
Which also said, Ye men of Galilee, why stand ye gazing up into heaven? this same Jesus, which is taken up from you into heaven, shall so come in like manner as ye have seen him go into heaven.
Acts : அப்போஸ்தலர் 1 : 11


