ஓ இயேசுவே பாரில் – Oh Yesuvae Paaril song lyrics
ஓ இயேசுவே பாரில் – Oh Yesuvae Paaril song lyrics
ஓ இயேசுவே! பாரில் உந்தன் ஆட்சி வருகவே
நின் உலகிலே வாழ்வு நிறையும் மாட்சி நிறைந்ததே
1. அன்புறவு சமாதானம், நீதியுடன் முழு நிறைவும்
ஆண்டவனின் மாட்சிமிக்க ஆட்சியதன் அடையாளம்
ஆன்ற அதன் அமைப்புகளும் என்றென்றும் புதியவைகள்
ஆதி வாழ்க்கை மறைந்திடுமே ஜோதியாக மலர்ந்திடுமே.
2. ஆட்சியதன் மாதிரியே அர்ப்பணமாம் வாழ்க்கையதே
மாட்சிமையான சிலுவையே ஆட்சியதன் வல்லமையே
காட்சியாகச் சிலுவையிலே இயேசு நாதர் மகிமை பெற்றார்
சாட்சியாக மகிமையினை அவர் போலவே அடைந்திடுவோம்.
3. பழமை வாதப் பெருமைகளால் விளைந்திருக்கும் பிரிவினைகள்
கலைந்துவிட இறைவனாட்சி வந்து எமை ஒன்றாக்கக்
கர்த்தனவர் வருகைக்காகக் காத்திருந்த இஸ்ரவேல் போல்
காத்திருந்து இறைவனவர் ஆளுகையை அறிந்திடுவோம்.
4. நான்கு சுவர் மட்டிலுமே எட்டிடும் நம் இறைப் பணியும்
நலிந்திடாமல் எட்டுத்திக்கும் உடைந்து எங்கும் ஒளி தரவும்
நில உலகில் இறையாட்சியால் புத்துயிரே பெற்றிடவும்
நிறைவுடனே பணியும் செய்வோம் மாதிரியை மாற்றிடுவோம்.
Oh Yesuvae Paaril song lyrics in English
Oh Yesuvae Paaril Unthan Aatchi Varugavae
Nin Ulagilae Vaazhuv Niraiyum Maatchi Niranthathae
1.Anburavu Samaathaanam Neethiyudan Muzgu Niraiyum
Aandavanin Maatchimikka Aatchiyathan Adaiyaalam
Aantra Athan Amaippugalum Entrentrum Puthiyavaigal
Aathi Vaazhkkai Maranthidumae Jothiyaaga Malarnthidumae
2.Aatchiyathan Maathiriyae Arppanamaam Vaazhkkaiyatahe
Maatchimaiyaana Siluvaiyae Aatchiyathan Vallamaiyae
Kaatchiyaa Siluvaiyilae Yesu Naathar Magimai Pettaar
Saatchiyaaga Magimaiyinai Avar Poalvae Adainthiduvom
3.Pazhamai Vaatha Perumaigalaal Vilanthirukkum Pirivinaigal
Kalainthuvida Iraivanaatchi Vanthu Emai Ontraaga
Karththanavar Varukaikaaga Kaathiruntha Isravael Poal
Kaaththirunthu Iraivanavar Aalugaiyai Arinthiduvom
4.Naangu Suvar Mattilumae Ettidum Nam Irai Paniyum
Nalinthidaamal Ettuthikkum Udainthu Engum Ozhi Thaavum
Nila Ulagil Iraiyaatchiyaal Puththuyirae Pettridavum
Niraivudanae Paniyum Seivom Maathiriyai Maattiduvom
Related
Tags: all tamil christian songs lyricsbest tamil christian songs lyricsbiblechristianmediachristianmediasGod Mediaslatest tamil christian songs lyricsMusicnew tamil christian songs lyricsprayertamiltamil christian song and lyricsTamil christian song lyricsTAMIL CHRISTIAN SONGSTamil christian songs lyricstamil christian songs lyrics apptamil christian songs lyrics booktamil christian songs lyrics chordsTamil christians songsTamil SongTamil Songs