அன்பு தீபம் இதயம் ஏந்தி – Anbu Deepam Idayam Yeanthi Lyrics
அன்பு தீபம் இதயம் ஏந்தி – Anbu Deepam Idayam Yeanthi Lyrics
அன்பு தீபம் இதயம் ஏந்தி சங்கமமாவோம்
அன்பர் இயேசு பலியிணைந்து சரித்திரமாவோம் அருள் நதி பாயும் இந்த திருப்பலி தனிலே அரும்பெரும் பலியாய் நமது தியாகப் பணிகளை அர்ச்சனைப் பூவாய் அர்பணமாக்கி அர்த்தங்கள்
காணுவோம்
I. வார்த்தை வழியிலே வாழச் சொல்லவதும்
வாழும் வாழ்விலே வரங்கள் பொழிவதும்
இந்த பலி இறையின் பலி இணையில்லாத பலிதான் – 2
நன்மை நெறியிலே நம்மைப் பகிரவும்
நாளும் நமக்குள்ளே நம்பிக்கை வளர்ப்பதும்
இந்த பலி இறையின் பலி இணையில்லாத பலிதான் – 2
இறைவனே தம்மையே
இறைவனே தம்மையே மனிதருக்கு அளிக்கும்
இணையற்ற பலியின் புனித நிகழ்விலே
2. நேர்மை உணர்விலே நெஞ்சம் துடிப்பதும்
நேய பணியிலே நம்மை இணைப்பதும்
இந்த பலி இறையின் பலி இணையில்லாத பலிதான் – 2
மன்னிக்கும் மனதிலே மகிழ்வைப் பொழிவதும் மாந்தர் உறவிலே ஒன்றிக்கச் செய்வதும்
இந்த பலி இறையின் பலி இணையில்லாத பலிதான் – 2
அப்பமும் இரசமுமே
அப்பமும் இரசமுமே இறை உயிராகும்
அற்புதங்கள் நிகழ்த்தி நம்மை மறையுடலாக்கும்
Tamil Mass RC christian song with lyrics – அன்பு தீபம் இதயம் ஏந்தி Anbu Thipam Idayam வருகைப் பாடல்
Tags: tamil catholic songs