தேவன் தந்த ராகமே – Devan Thantha Raagamae
Shop Now: Bible, songs & etc
தேவன் தந்த ராகமே – Devan Thantha Raagamae
தேவன் தந்த ராகமே
தேன் சிந்தும் ராகமே
அன்பின் ராகம் அமுத கானம்
தேவன் தந்த ராகமே – இந்த
ஜீவன் என்றும் உணர்ந்து பாடும்
தேவன் தந்த ராகமே
கருணை தெய்வமே என்றும் வாழும் தெய்வமே
எனது ஜீவன் உன் அன்பை தேடுதே
இந்த ஜீவன் மேல் இறை அன்பைப் பொழிந்ததேன்?
எந்தன் உயிரிலே உந்தன் உறவும் கலந்ததால்
இந்த அன்பு என்றென்றும் என்னில் சொந்தமானது
இனிய தேவளே என்னில் தோன்றும் உதயமே
இன்ப ராகம் என் நெஞ்சம் பாடுதே
உந்தன் அன்பினால் மனம் சோர்ந்ததில்லையே
நாளும் பொழுதுமே அது என்னை தேற்றுமே
என் உதிரம் முழுவதும் நீ ஊற வேண்டுமே?
Tags: tamil catholic songs