கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று – Christmas Seithi Song Lyrics

Faith Score0
Faith Score0

கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று – Christmas Seithi Tamil Christmas Song Lyrics From The Album Athisayam Vol 14.

Christmas Seithi Christian Song Lyrics in Tamil

கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று தெரியுமா?
இது போல ஒரு நாள் நமக்கு கிடைக்குமா?
ஓ.. ஓ..தேவன் நம்மை தேடி வந்த நாள் இது!
நம் தேசம் முழுதும் அவரை தேடும் நாள் இது!

வெள்ளை மனது கொண்டு நாமும் அவரை பாடினால்
உள்ளம் இன்று வானம் போல ஆகுமே
நல்ல இயேசு பிறந்த இந்த புனித நாளிலே
மனதில் வான தூதர் பாடும் பாடல் கேட்குதே

ஆடுவோம் பாடுவோம் இயேசு பிறந்த நாளிலே
கூடியே பாடுவோம் வானம் திறந்த நாள் இது
தேவனின் பாடலை சேர்ந்து நாமும் பாடினால்
வானமும் பூமியும் கூட சேர்ந்து பாடுமே

1. காலத்தை கடந்தவர் இவர் தானே
புது வாழ்விற்கு பாதை தருவாரே
ஜோதியாய் தோன்றிடும் இவர் தானே
நல்ல செய்தியாய் எழுந்திங்கு வருவாரே

இதய கதவை திறப்போமே
இவர் வாழ்ந்திட வாரும் என்று அழைப்போமே
எல்லோரும் இவர் செய்தி கேட்டுவிட்டால்
கல்லான மனசு கூட கனிந்துவிடும்
எல்லோரும் இவரோடு சேர்ந்துவிட்டால்
எல்லாமே நலமாக மாறிவிடும்

Happy Happy Christmas
Merry Merry Christmas-2-கிறிஸ்மஸ்

2. ஏழையாய் தோன்றிய இவராலே
இனி ஏழைகள் வாழ்வினை பெறுவாரே
வேதனை தீர்ப்பவர் இவர் தானே
இனி வாழ்வினில் ஆறுதல் இவர் தானே

வாட்டிடும் பிரிவினைகள் வேண்டிடாமே
மன மாற்றத்தில் உறவுகளை வளர்ப்போமே
எல்லோரும் மனதாலே சேர்ந்திருந்தால்
எந்நாளும் அழியாமல் வாழ்ந்திடுவோம்
எல்லோரும் வாழ்க என்று வாழ்த்திவிட்டால்
எல்லாமே வளமாக மாறிவிடும்

Happy Happy Christmas
Merry Merry Christmas-2-கிறிஸ்மஸ்

 

Key Takeaways

  • The article features the Tamil Christmas song ‘கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று – Christmas Seithi Song Lyrics’.
  • It celebrates the birth of Jesus and invites everyone to join in singing and joy.
  • The lyrics emphasize unity, hope, and the transformative power of Jesus’ message during Christmas.

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo